சென்னை: அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான முதல் நிலை எழுத்துத் தேர்விற்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவி - (முதல்நிலை எழுத்துத் தேர்வு)
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநருக்கான எழுத்துத் தேர்வு (முதல்நிலை) நவம்பர் 6 ஆம் தேதி, காலை 5 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவுவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
தேர்வர்களுக்கான அறிவுரைகள்
தேர்வர்கள் விடைத்தாளில் விபரங்களை பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும் கறுப்பு நிற மை பந்துமுறை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தாள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும்.
எந்த ஒரு தேர்வரும் காலையில் நடைபெறும் தேர்விற்கு 9.15 மணிக்கு பின்னர் தேர்வு கூடத்திற்குள் நுழையவோ, 12.15 மணிக்கு முன்னர் தேர்வுக் கூடத்தில் இருந்து வெளியேறவோ அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை எளிதில் தெரிந்துக் கொள்ளும் வகையில் தேர்வுகூட நுழைவுச்சீட்டில் கியூ ஆர் கோடு அச்சிடப்பட்டுள்ளது. இதனை, கியூஆர்கோடு ஸ்கேன் செய்து தேர்வுக் கூடம் அமைந்துள்ள இடத்தை கூகுள் மேப் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
தேர்வு அறைக்குள் செல்போன் கொண்டுசெல்ல அனுமதி இல்லை. தேர்வு அறையில் அமைக்கப்படும் பாதுகாப்பு அறையில் தேர்வரின் சொந்தப் பொறுப்பில் வைத்து விட்டு செல்ல வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வேலம்மாள் பள்ளியில் " பாதுகாப்பான தீபாவளி " விழிப்புணர்வு நிகழ்ச்சி!