ETV Bharat / city

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறந்தவரை தூக்கி செல்ல உதவிய பெண் காவலர்! காவல் ஆணையர் பாராட்டு - ஆய்வாளர் ராஜேஸ்வரி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் திடீரென உயிரிழந்த நபரை தூக்கி செல்ல, உதவிய பெண் காவலர் லீலாஸ்ரீக்கு காவல் ஆணையர் பாராட்டினார்.

பெண் காவலர் லீலாஸ்ரீ
பெண் காவலர் லீலாஸ்ரீ
author img

By

Published : Mar 9, 2022, 10:41 PM IST

Updated : Mar 9, 2022, 11:03 PM IST

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 21% பேர் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் பெண் காவலர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் பணியில் சிறப்பாகப் பணியாற்றிய பெண் காவலர்கள் பெருமைப்படுத்தப் பட்டனர்.

அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பாக ஆய்வாளர் ராஜேஸ்வரி இளைஞர் ஒருவரைத் தனியாகத் தோளில் தூக்கிச் சென்ற சம்பவம் சர்வதேச அளவில் சென்னை காவல் துறைக்குப் பெருமை சேர்த்தது.

பயணத்தின்போது உயிரிழந்த சோகம்

இதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு மூர் மார்க்கெட், அல்லிக்குளம் அருகே புறநகர் ரயில் நிலைய நுழைவு வாயிலில் ஒரு நபர் மயங்கிக் கிடப்பதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்ததின் அடிப்படையில், பெரியமேடு ரோந்து வாகன காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் ஏறச்சென்ற, தனியார் மருத்துவர் சோதனை செய்ததில் அந்த நபர் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

உதவிசெய்யாத மக்கள்

காவல்துறை விசாரணையில், அந்த நபர் அவரது சித்தியுடன் ரயில் நிலையத்துக்கு நடந்து வரும்போது, வலிப்பு வந்து மயங்கி விழுந்து இறந்தது தெரியவந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் செல்லும் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்த நபருக்கு யாரும் முதலுதவி செய்யாததால் இறந்ததும் தெரிய வந்துள்ளது. இதனால், உடன் வந்த நபர் செய்வதறியாது இருந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

காவல்துறையின் உதவி

இறந்த நபரைத் தூக்குவதற்குக் கூட யாரும் முன் வராத நிலையில், ரோந்து வாகன பொறுப்பு பெண் காவலர் லீலாஸ்ரீ, தன் சக காவலர் தினேஷுடன் சேர்ந்து இறந்த நபரைத் தூக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளார். உடன் வந்த பெண்மணிக்கு ஆறுதல் கூறி காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

இரவுப் பணியின்போது, இறந்த நபரைத் தூக்கி வாகனத்தில் ஏற்றி அனுப்பிய பெரிய மேடு பெண் காவலர் லீலாஸ்ரீயின் வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் பலரது பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

பெண்காவலருக்கு பாராட்டுகள்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறந்தவரை தூக்கி செல்ல உதவிய பெண் காவலர்! காவல் ஆணையர் பாராட்டு

இதனையடுத்து பெரியமேடு காவல் நிலையத்தில் ஆய்வாளர் முகமது பரகத்துல்லா நேற்று பெண்கள் தினத்தன்று லீலாஸ்ரீயை அழைத்துப் பாராட்டி பரிசளித்துள்ளார். மேலும், அவரின் இந்தச் செயலைப் பாராட்டி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும், பெண் காவலர் லீலாஸ்ரீக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய லீலாஸ்ரீ, இது போன்று இறந்தவர்கள் உடல்களை ஆம்புலன்ஸில் ஏற்றுவது காவல்துறையினர் எல்லோரும் வழக்கமாக செய்யும் வேலை தான் எனவும், தன் பணியைத் தான் செய்ததாகவும் கூறினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனது கணவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்த அவர், உயிரின் மதிப்பை அறிந்து பொதுமக்கள் யாராவது முதலுதவி அளித்திருந்தால் வலிப்பினால் கீழேவிழுந்த அந்த நபரைக் காப்பாற்றி இருக்கலாம் எனப் பெண் காவலர் லீலாஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எதற்கும் துணிந்தவர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

Last Updated : Mar 9, 2022, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.