ETV Bharat / city

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு தொடங்கியது

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று (ஏப். 25) தொடங்கி மே இரண்டாம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை சுமார் ஐந்து லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு தொடங்கியது
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு தொடங்கியது
author img

By

Published : Apr 25, 2022, 12:21 PM IST

Updated : Apr 26, 2022, 10:42 AM IST

சென்னை: தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அறிவியல் பாடம் மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறை தேர்வை எழுத வேண்டியது கட்டாயமாக உள்ளது.

நேரம் குறைப்பு: அதன் அடிப்படையில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் இரண்டு கட்டங்களாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செய்முறை தேர்விற்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் செய்முறை தேர்வு நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் காரணமாக, திறக்கப்படாமல் இருந்த பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கியது. பள்ளி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் போது அவர்களுக்கான பாடத்திட்டங்களும் குறைக்கப்பட்டன. அதன் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வு எழுதுவதற்கான பயிற்சியும் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு தொடங்கியது

போதுமான பயிற்சி : சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான செய்முறை தேர்வினை ஆர்வமுடன் எழுதினர். செய்முறை தேர்வு குறித்து முதுகலை ஆசிரியர் மணிமாறன், "அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட்டன.

மேலும், குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி செய்முறைப் பயிற்சி எழுதுவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் முடிக்கப்பட்டு மாணவர்களும் தேர்வு எழுத தயார் நிலையில் உள்ளனர். அரசு கரோனா தொற்றினை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கான பாடத்தை குறைந்துள்ளதால் அவர்கள் அச்சமின்றி தேர்வினை எதிர் கொள்கின்றனர்" என தெரிவித்தார்.

அதேபோல், வேதியியல் ஆசிரியை விமலா கூறும்பொழுது, "அரசின் வழிகாட்டுதலின்படி, மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எந்தவித அச்சமுமின்றி செய்முறை தேர்வினை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா தொற்றால் பள்ளிக்கு வராமல் இருந்தாலும், அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால் அச்சமின்றி தேர்வை எதிர்கொண்டு வருகின்றனர்.

செய்முறை தேர்வு மற்றும் பொதுத்தேர்வு குறித்து மாணவிகள் கூறும்போது, "குறைக்கப்பட்ட பாடத்தின்படி தங்களுக்கு அனைத்து பயிற்சியும் ஆசிரியர்கள் அளித்துள்ளனர். மேலும், பாடங்கள் முழுவதும் நடத்தி முடிக்கப்பட்டு திருப்புதல் தேர்வு மற்றும் பயிற்சி தேர்வுகள் நடத்தியுள்ளதால் பொதுத்தேர்வு எந்தவித அச்சமுமின்றி எதிர்கொள்வோம்" என்றனர்.

இதையும் படிங்க: 11, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நேரம் குறைப்பு

Last Updated : Apr 26, 2022, 10:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.