ETV Bharat / city

பிரபாகரன் - விடுதலைக்காக ஏங்கும் மனிதர்களின் அடையாளம்...! #HBDPrabhakaran65

பிரபாகரனால் துப்பாக்கி தூக்கி சண்டை மட்டுமா போட முடியும். அவரால் 'கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்' திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை ஆராதிக்க முடியும். வைகைப்புயல் வடிவேலுவை கொண்டாடத் தெரியும்.

#HBDPrabhakaran65
தலைவர்65
author img

By

Published : Nov 26, 2019, 12:05 PM IST

Updated : Nov 26, 2019, 4:35 PM IST

உலகத்தின் எந்த மூலையில் ஒரு மனிதனோ, ஒரு இனமோ ஒடுக்கப்படுகிறார்களோ அங்கு ஒரு தலைவன் உருவாவதற்கான சூழல் தானாகவே உருவாகிறது. அப்படித்தான் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டபோது பிரபாகரன் என்ற தலைவர் உருவானார்.

பிரபாகரன் இந்தப் பெயர் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழின வரலாற்றின் பக்கங்களில் அழுத்தம் திருத்தமாக இருக்கும். ஏனெனில் அவர் செய்திருக்கும் விஷயம் அப்படி. முறம் கொண்டு புலி விரட்டிய தமிழ் பெண், உலகத்திற்கு அறம் போதித்த இலக்கியங்கள் என தமிழுக்கும், தமிழர்களுக்கும் நீண்ட பெரிய வரலாறு உண்டு. அந்த வரலாற்று இனம் இலங்கையில் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது வேலுப்பிள்ளை பிரபாகரன் திமிறி தலைவராக உருமாறினார்.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன்
தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன்

உலகத்தில் எவ்வளவோ போராட்ட இயக்கங்கள் இருந்திருக்கின்றன. இன்னமும் இருக்கின்றன. ஆனால், பிரபாகரன் கட்டமைத்த விடுதலைப் புலிகள் இயக்கம் போல், எந்த ஒரு போராட்ட இயக்கமும் கட்டுப்பாட்டோடு இருந்தனவா? இருக்கின்றனவா? என்பது சந்தேகம். தனது குறி யார், எது என்பதில் மிக மிகத் தெளிவாக இருந்தவர் பிரபாகரன். முப்படையைக் கட்டி அமைத்து அந்த படைகளுக்குத் தளபதிகளை நியமித்து, அதற்கேற்றார் போல் சீருடைகளைக் கொடுத்து ஒரு ராணுவத்தையே உருவாக்கி வைத்திருந்தார் அவர்.

துப்பாக்கி சுடுதலைச் சொல்லி கொடுக்க பிரத்யேக பயிற்றுநர்கள் கிடையாது, ஒரு இயக்கத்தை உருவாக்கி அதை முறையாக நடத்துவதற்கான நிர்வாகப் பயிற்சியும் கிடையாது. ஆனால் இவை அனைத்தையும் சுயம்புவாக சாத்தியமாக்கிக் காட்டினார், பிரபாகரன். அதற்குக் காரணம் அவருக்குள் இருந்த விடுதலை குறித்தான வேட்கையே காரணம். அந்த வேட்கைதான் அவரை கால் நூற்றாண்டு காலம், உலக வல்லாதிக்க அரசுகளை எதிர்த்து துணிச்சலோடு போராட வைத்து பல வெற்றிகளையும் பெற வைத்தது.

தலைவர் வைத்த குறி
தலைவர் வைத்த குறி

பிரபாகரன் தமிழினத்தின் அடையாளம்தான். அதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர் தமிழினத்தின் அடையாளம் என்பதைவிடவும் அவர் ஒரு மனித இனத்தின் அடையாளம் என்று கூறுவதன் மூலம்தான் பிரபாகரனை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். இலங்கை என்னும் ஒற்றை நாட்டோடு நேரடியாக யுத்தம் புரிந்து கொண்டிருந்தாலும் அவர் மறைமுகமாக பத்துக்கும் மேற்பட்ட வல்லாதிக்க நாடுகளுடன் யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார் என்பதுதான் நிதர்சனம்.

அவரை ஏன் மனித இனத்தின் அடையாளமாக உருவகப்படுத்த வேண்டுமென்றால், மேற்கூறியது போல் அவருடைய எதிரி யார் என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார். அவருக்கு எதிரி ஒட்டுமொத்த சிங்கள இனமும் இல்லை. சிங்கள இனவாத அரசு தான். அதனால்தான் பயணிகள் அனைவரும் சென்ற பிறகு, ஒரு நியாயத்துடன் அப்பாவி உயிர்களைக் கொல்லாமல், கொழும்பு பண்டார நாயக சர்வதேச விமான நிலையத்தை விடுதலைப் புலிகள் தாக்கினார்கள். அந்த விமான நிலையத்தை தாக்கியதால், சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அச்சப்பட்டார்கள். கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் இலங்கையின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்தது.

தனது ராணுவத்துடன்
தனது ராணுவத்துடன்

இலங்கையைப் பொருளாதார ரீதியாக அடிக்க வேண்டும், அரசியல் ரீதியாக மடக்க வேண்டும், யுத்தம் ரீதியாக நொடிக்க வேண்டும். அதுதான் அவரின் நோக்கமாக இருந்ததே ஒழிய சிங்கள மக்களை கொன்று குவிப்பது அல்ல. அப்படி செய்திருந்தால் பிரபாகரனுக்கு இந்நேரம் வேறு வண்ணம் பூசப்பட்டிருக்கும். பிரபாகரன் மனிதநேயமிக்க தலைவர் என்பதற்கு ஒரு சோற்றுப்பத உதாரணம் நிகழ்ந்தது. அதாவது, சிங்கள ராணுவ வீரர் ஒருவரை விடுதலைப் புலிகள் சிறைப்படுத்தி வைத்திருந்தபோது, அந்த ராணுவ வீரரின் மனைவியும், குடும்பமும் அவரைப் பார்க்க வேண்டும் என்று விருப்பப்பட, உடனடியாக அவர்களது விருப்பத்தை பிரபாகரன் நிறைவேற்றினார். அறம் போதித்த தமிழ் இனத்தைச் சேர்ந்தவர் அல்லவா அவர். இப்படி பல சம்பவங்களை பிரபாகரன் ஒரு மனிதன் என்பதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.

கட்டுப்பாடுகள் மட்டும் விதித்து, அதைத் தானே மதிக்காமல் இருக்கும் தலைவன் ஒரு ரகம். கட்டுப்பாடுகளை விதித்து அதை மற்றவர்கள் பின்பற்றுகிறார்களா என்பதை கண்டுகொள்ளாமல் இருத்தல் மற்றொரு ரகம். பிரபாகரன் இந்த இரண்டு ரகமும் இல்லை. கட்டுப்பாட்டினை விதித்து அதை தானும் பின்பற்றி மற்றவர்களையும் பின்பற்ற வைத்த முன் உதாரண ரகம் அவர்.

பொட்டு அம்மான், தமிழ்செல்வனுடன்
பொட்டு அம்மான், தமிழ்செல்வனுடன்

'தலைவன் ' என்பவன் சர்வாதிகாரியாக இருக்கக்கூடாது. மிக சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தலைவனுக்கு காதுகள் எப்போதும் திறந்தே இருக்க வேண்டும். அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்பதோடு மட்டுமின்றி, அது சரியாக இருக்கும்பட்சத்தில் எந்த ஈகோவும் இல்லாமல் அதை செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் அந்த தலைவர் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு, தங்களை முழுமையாக ஒப்படைப்பார்கள். பிரபாகரன் அப்படிப்பட்ட தலைவர்.

ஈழத்தில் ஏராளமான போராட்டக் குழுக்கள் உருவாகின. ஆனால் அவை காலப்போக்கில் கரைந்து போயின. ஏனெனில், அந்த இயக்கத்தின் தலைவர்கள் ஒன்று சர்வாதிகாரியாக இருந்தார்கள். இல்லை சந்தர்ப்பவாதியாக இருந்தார்கள். பிரபாகரன் மட்டும்தான் நல்ல தலைவனாக இருந்தார். அதனால்தான் இன்றுவரை விடுதலைப் புலிகள் என்ற பெயரையும், பிரபாகரன் என்ற பெயரையும் கேட்டால், பெரும்பான்மையான சிங்கள இன வெறியர்களுக்கு தலை நடுங்குகிறது, தமிழர்களுக்குத் தலை நிமிர்கிறது.

பெண் புலிகளுடன்
பெண் புலிகளுடன்

'முதலில் உன்னை திருத்திக் கொள், இந்த சமூகம் தானாய் திருந்தி கொள்ளும்' என்ற ஒரு வாசகம் உண்டு. அதேபோல், விடுதலை வேண்டும், போராட வேண்டுமென்றால் முதலில் நாமும், நமது வீட்டிலிருப்பவர்களும் போராட்ட களத்திற்குச் சென்றால் மற்றவர்களும், அவர்களின் வீட்டிலிருப்பவர்களும் தானாய் சமர்க்களத்திற்கு வருவார்கள். இதில் சிறு சமரசம் நாம் செய்தாலும் நமது விடுதலை வேட்கை சர்வ நாசமாகி விடும். இதுவரை உலகின் உன்னதப் போராளிகள் எனப் போற்றப்படும், அனைவரது வீட்டிலிருந்தும் சமர்க்களத்திற்கு சென்றிருக்கிறார்கள். அதுபோல்தான் பிரபாகரனும்; தலைவன் என்ற கேடயத்திற்குள் அவரும் இருந்ததில்லை, அந்த கேடயத்திற்குள் அவரது குடும்பத்தினரும் இருந்ததில்லை.

தொண்டை கிழிய அவர் மேடையில் கத்தியதில்லை, நான் இப்படிப்பட்டவன் அப்படிப்பட்டவன் என்று அவர் சுயதம்பட்டம் அடித்துக்கொண்டதில்லை, நான் இந்த வித துப்பாக்கிகளை பயன்படுத்தியிருக்கிறேன் என்று சொல்லியதில்லை, ஒட்டுமொத்த தமிழினமும் தனக்குக் கீழ்தான் இருக்க வேண்டும். நான்தான் உங்களுக்கு எல்லாம் ரட்சக புருஷன் என்று பிதற்றிக்கொண்டதில்லை. ஆனால், தமிழினத்தை ஒடுக்கிக் கொண்டிருந்தவர்களை சத்தமில்லாமல் அலற விட்டுக்கொண்டிருந்தார். அதுதான் பிரபாகரன் என்னும் ஆளுமை.

இந்திய  ராணுத்துடன்
இந்திய ராணுத்துடன்

உலகின் பெரிய ராணுவங்களில் ஒன்றான இந்தியாவுடன் ஒரு போராளி இயக்கம் போராடுவதை நினைத்துப் பார்க்க முடியுமா? முடியாதுதான். ஆனால், விடுதலைப் புலிகளால் அதை நினைத்துப் பார்க்க மட்டுமில்லை... இந்திய ராணுவத்துடன் சண்டையிட்டு அதனை பின்னடைய செய்யவும் முடிந்தது. ஏனெனில், பிரபாகரனைப் பொறுத்தவரை பேச்சைவிட செயலில் இறங்க வேண்டும் என்று தீவிரமாகச் சிந்தித்தவர்.

பிரபாகரனால் துப்பாக்கி தூக்கி சண்டை மட்டுமா போட முடியும். அவரால் 'கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்' திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை ஆராதிக்க முடியும். வைகைப்புயல் வடிவேலுவை கொண்டாடத் தெரியும். இயக்குநர் பாலுமகேந்திராவை உளப்பூர்வமாக ரசிக்க முடியும். இயக்குநர் மகேந்திரனை வரவழைத்து, '' எங்கட மக்களுக்கு சினிமா சொல்லிக்கொடுங்கோ அண்ணா '' என்று வாஞ்சையாக கோரிக்கை வைக்கவும் முடியும். அவர் கலையை மற்றொரு போராட்ட வடிவமாகப் பார்த்தார்.

குழந்தையுடன் தலைவர் பிரபாகரன்
குழந்தையுடன் தலைவர் பிரபாகரன்

பிரபாகரன் பறவை பார்வை கொண்டவர். சரியாகச் சொல்லப்போனால், அவர் ஒரு சர்வதேச தலைவர். அவரை சிறு வட்டத்திற்குள் அடக்கக் கூடாது. ஆனால், பிரபாகரன் தங்களுக்குத்தான் சொந்தம், தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று தற்போது சிலர் பேசிவருவதைப் பார்க்கும்போது, இந்தக் கால தலைமுறையினருக்கு அவர் வேறு விதமாக தெரிந்துவிடுவாரோ என்ற அச்சம் எழுகிறது. ஃபிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா போன்றோர் எப்படி சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறார்களோ அதுபோல் கொண்டாடத் தகுதியானவர் பிரபாகரன். அவரை இனி நாம் அங்குதான் அழைத்துச் செல்ல வேண்டும்.

முக்கியமாக, அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவானான மரடோனா 2012ஆம் ஆண்டு, கேரளா மாநிலத்திற்கு வந்திருந்தபோது தனக்குப் பாதுகாவலராக வந்தவரின் பெயர் பிரபாகரன் என்பதைத் தெரிந்துகொண்டு, தனது கையில் பச்சைக் குத்தியிருந்த சேகுவேராவின் புகைப்படத்தைக் காட்டி... இவரைப்போல் பிரபாகரனும் மாபெரும் தலைவர் என்று சொல்லிவிட்டு சென்றார்.

மரடோனா
மரடோனா

அப்படி பிரபாகரன் உன்னதத் தலைவராக, போராளியாக சர்வதேச அளவில் எப்போதோ சென்றுவிட்டார். எனவே, மேற்கொண்டு அவரை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கவேண்டுமே ஒழிய, ' நமக்கு மட்டும்தான் அவர் சொந்தம்' என்று கொண்டாடி நமக்குள் வைத்துக்கொள்ள வேண்டியவர் இல்லை அவர். ஏனெனில் பிரபாகரன் தமிழர்களுக்கு எப்போதும் சொந்தம், உலகத்தினருக்கு எப்போதும் தேவை.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு இங்கு யாரிடமும் பதிலில்லை. உயிருடன் இல்லை என்றால் அவரது தாகமான தமிழீழத்தை அரசியல் ரீதியாக வென்று மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பு தற்போதுள்ள அனைவரிடமும் இருக்கிறது. ஏன் போராட்ட வடிவத்தில் பெற முடியாதா என்று கேள்வி கேட்டால்; ஆம் முடியாதுதான். அவர் போல் இனி ஒருவர் வர முடியாது. வந்தாலும் அவர்போல் போராட முடியாது.

தலைவர் பிரபாகரன்
தலைவர் பிரபாகரன்

அதேசமயம், அவர் உயிருடன் இருந்தால் நிச்சயம் உலக அரசியல் சூழல் முதல் தமிழ்நாடு அரசியல் சூழல் வரை அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருப்பார். கண்டிப்பாக அவர் பெயர் வைத்து சிலர் செய்யும் செயல்களை ரசிக்க மட்டும் செய்யமாட்டார். ஏனெனில் பிரபாகரன் சிலரின் அடையாளம் மட்டுமில்லை. தமிழினத்தின் அடையாளம்; விடுதலைக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த மனிதர்களின் அடையாளம்...!

Intro:Body:

prabhakaran birthday

Conclusion:
Last Updated : Nov 26, 2019, 4:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.