பண்டிகை தினங்களின் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வண்ணம் கோயம்பேடு, மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூந்தமல்லி, தாம்பரம், கே.கே.நகர் என ஐந்து இடங்களில் இருந்து சிறப்புபேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகளுடன், 930 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3 ஆயிரத்து 155 பேருந்துகள் இன்று இயக்கப்படுகின்றன.
இதேபோல், நாளையும் வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 225 பேருந்துகளுடன், 765 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 2 ஆயிரத்து 990 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு பேருந்து அட்டவணை கீழ்வருமாறு:
தேதி | நிர்ணய இயக்கம் | சிறப்பு பேருந்து | மொத்தம் |
04.10.2019 வெள்ளிக்கிழமை | 2225 | 930 | 3155 |
05.10.2019 சனிக்கிழமை | 2225 | 765 | 2990 |
மொத்தம் | 4450 | 1695 | 6145 |
04.10.2019 | 05.10.2019 | ||||||
எண் | பேருந்து நிலையம் | நிர்ணயம் | சிறப்பு | மொத்தம் | நிர்ணயம் | சிறப்பு | மொத்தம் |
1 | கோயம்பேடு | 921 | 600 | 1521 | 921 | 445 | 1366 |
2 | மாதவரம் புதிய பேருந்து நிலையம் | 245 | 20 | 265 | 245 | 0 | 245 |
3 | பூவிருந்தவல்லி | 508 | 150 | 658 | 508 | 160 | 668 |
4 | 1. தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம் | 247 | 80 | 327 | 247 | 80 | 327 |
2. தாம்பரம் மா.போ.க ரயில் நிலையப் பேருந்து நிருத்தம் | 158 | 50 | 208 | 158 | 50 | 208 | |
5 | கே.கே நகர் மா.போ.க பேருந்து நிலையம் | 146 | 30 | 176 | 146 | 30 | 176 |
மொத்தம் | 2225 | 930 | 3155 | 2225 | 765 | 2990 |