ETV Bharat / city

'அரசு பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி' - கே.பி அன்பழகன் - polytechnic students

சென்னை: 100 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வெளிநாட்டில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றும் திறந்தநிலைப் பல்கலை கழக மாணவர்களுக்கு இணையவழி மூலமாக கல்வி கற்பிக்கப்படும் என்றும் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்துள்ளார்.

அமைச்சர் கே.பி அன்பழகன்
author img

By

Published : Jul 2, 2019, 9:47 PM IST

சட்டப்பேரவை கூட்டத்தில் நடைப்பெற்ற விவாதத்தில் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசுகையில், "அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் 2019-2020ஆம் கல்வியாண்டில் தொடங்கப் படும்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வியை சிறப்பான முறையில் வழங்கும் பொருட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தால் வரையறை செய்யப்பட்டுள்ளது. அதன்படி அக்கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளான ஆய்வகம், நூலகம், பயிற்சிப் பட்டறை, வகுப்பறை உள்ளிட்ட கட்டடங்கள் கட்டப்படும். சென்னை மாநிலக் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, மகளிர் விடுதி கட்டடம் கட்டப்படும்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை கழகத்தில் இணையவழிக் கல்வி சட்டத்தின் கீழ் பாடங்களை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அங்கு உதவி மையங்கள் மற்றும் தேர்வு மையங்கள், 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிறுவப்படும்.

அரசுப் பொறியியல் கல்லூரி மாணவர்களைப் போல, பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் படிக்கு மாணவர்களின் திறனை உலகளவில் மேம்படுத்தும் வகையில் அயல் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு 100 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுவர்" என்றும் தெரிவித்தார்.

Intro:100 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு
வெளிநாட்டில் குறுகியகால பயிற்சி
அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்புBody:

100 பாலிடெக்னிக் மாணவர்களுக்கு
வெளிநாட்டில் குறுகியகால பயிற்சி
அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு
சென்னை,
உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்த பின்னர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசியதாவது , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பில் புதிதாக 81 பாடப் பிரிவுகள் 2019 20 ஆம் ஆண்டு தொடங்கப் படும்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வியை சிறப்பான முறையில் வழங்கும் பொருட்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுமத்தால் வரையறை செய்யப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை நிறைவு செய்யும் பொருட்டு ஆய்வகம், நூலகம், பயிற்சிப் பட்டறை, வகுப்பறை கட்டடங்கள் கட்டப்படும்.
சென்னை மாநிலக் கல்லூரியில் பயிலும் மாணவிகள் பயில்வதற்காக மகளிர் விடுதி கட்டிடம் கட்டப்படும். பாரதியார் பல்கலைக்கழகத்திற்கான பல திட்டங்களை நடைமுறைப் படுத்துவதன் மூலம் பரவும் மூலங்களை இடைவெளியற்ற வகையில் ஒருங்கிணைத்து அதிநவீன தகவல் தொழில்நுட்பத்துடன் துல்லியமான மற்றும் உரிய நேரத்தில் பயனுள்ள முடிவுகளை எடுப்பதற்கான தகவல்களை ஒருங்கிணைப்பபதால் நிருவாகம், நிதி, பாடத்திட்டம் மற்றும் தேர்வு பல்கலைக்கழக செயல்பாட்டு பிரிவுகளில் தகவல் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை கழகத்தால் இணையவழிக் கல்வி சட்டத்தின் கீழ் பாடங்கள் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் உதவி மையங்கள் மற்றும் தேர்வு மையங்கள் 91 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிறுவப்படும்.

அரசுப் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் குறுகிய கால பயிற்சி பெற அனுப்பி வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதேபோல் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் படிப்புக்கும் 100 மாணவர்களின் திறனை உலகளாவிய அளவில் மேம்படுத்தும் வகையில் அயல் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
கோயம்புத்தூர், சேலம் ,திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலியில் ஆகிய மண்டலங்களில் உள்ள பொறியியல் பட்டதாரி மாணவர்கள் தொழில்நுட்ப திறன் மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் ஆகியவற்றை மேம்படுத்த கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்..Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.