இது குறித்து பாமக தலைவர் ஜிகே மணி ட்விட்டர் பக்கத்தில், "2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விருப்ப மனு பெறப்படும் தேதி வரும் 27 வரை நீட்டிக்கப்படுகிறது. விருப்ப மனு அளிப்பவர்கள் வரும் 27ஆம் தேதி மாலை 5.00 மணி வரை சென்னை அலுவலகத்தில் மனு அளிக்கலாம்" என்றார்.
முன்னதாக பாமக விருப்ப மனு பெறப்படும் நாள் பிப்ரவரி 23 அன்று தொடங்கியது. மேலும், பிப்ரவரி 26 வரை, கட்சி நிர்வாகிகள் பாமக அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க...ஓய்வு வயது 60 என்பது தவறான செயல்!