மதுக்கடைகளை மூடக்கோரி பாமகவினர் பல இடங்களில் போராட்டம் நடத்தினர். அந்த வகையில், சென்னை கிழக்கு தாம்பரத்தில் மதுக்கடைகளை மூடக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர், செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் விநாயகம் தலைமையில் அவரவர் வீட்டின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, மதுக்கடையை உடனடியாக மூட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். மேலும், மதுவை கீழே ஊற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு - அன்புமணி ராமதாஸ் அறப்போராட்டம்