ETV Bharat / city

'உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள்': ஓபிஎஸ்-க்கு பிரமதர் மோடி அட்வைஸ்

பிரதமர் தன்னிடம் நலம் விசாரித்து, உடல் நலத்தை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி கூறியதாக சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

PM Modi OPS meeting in Chennai Airport
PM Modi OPS meeting in Chennai Airport
author img

By

Published : Jul 29, 2022, 1:35 PM IST

Updated : Jul 29, 2022, 2:13 PM IST

சென்னை: 44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று (ஜூலை 28) சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின், பிரதமர் மோடி இன்று (ஜூலை 29) காலை 11.55 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து விமானப்படையின் தனி விமானம் மூலம் அகமதாபாத் புறப்பட்டார்.

இதற்கு முன், விமான நிலையத்தில், ஓ.பன்னீர்செல்வத்தை சிறிதுநேரம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பின் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,"பிரதமர் நரேந்திர மோடி எனது உடல் நலம் குறித்து விசாரித்தார். அதோடு உடல் நலத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்" என்றார்.

'உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள்': ஓபிஎஸ்-க்கு பிரமதர் மோடி அட்வைஸ்

இதையடுத்து அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு குறித்து கேள்வி எழுப்பட்டது. இதற்கு அவர் "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும்... வெல்லும்..." என்றார். ஈபிஎஸ் - ஓபிஎஸ் இணைப்பு சாத்தியமா என்று கேட்டதற்க்கு பதில் அளிக்காமல் புறப்பட்டு சென்றார்.

இதையும் படிங்க: திமுக, பாஜக கூட்டணி வராது - அண்ணாமலை

Last Updated : Jul 29, 2022, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.