ETV Bharat / city

6 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க திட்டம்!

அக்டோபர் முதல் வாரத்தில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறக்க கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 முதல் 8ஆம் வகுப்புவரை பள்ளிகளை திறக்க திட்டம்

author img

By

Published : Sep 16, 2021, 12:26 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதிமுதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மாணவர்களின் நலனுக்காக..

கரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு 50 விழுக்காடு மாணவர்கள் மட்டும் பள்ளிகளுக்கு வரவேண்டும் என அறிவித்திருந்தது. அதன்படி பள்ளி மாணவர்களும் அரசின் அறிவுறுத்தலின் பேரில் சுழற்சி முறையில் பள்ளிக்குச் செல்கின்றனர். மேலும், மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலமும், ஆன்லைன் வாயிலாகவும் மூலமும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதில், 20 லட்சம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து செல்லும் நிலையில், கடந்த வாரம் வரை 80 மாணவர்களுக்கு மட்டுமே கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செப்டம்பர் 14ஆம் தேதி சென்னையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

விரைவில் அறிவிப்பு

அப்போது, பள்ளிகள் திறப்பது குறித்த சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டன. அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (செப்.16) காலையில் அளித்தார்.

அதனடிப்படையில், மருத்துவத் துறை வல்லுநர்களுடன் ஆலோசனை செய்யப்பட்ட பின்னர், கரோனா பாதிப்பு மிகப்பெரும் அளவில் இல்லை என்பதால், அடுத்த கட்டமாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. இது குறித்தான அறிவிப்பை முதலமைச்சர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ’பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்காமல் தேர்வு கூடாது’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.