சென்னை அடுத்த தாம்பரம், முடிச்சூர் ,பெருங்களத்தூர் ,வரதராஜபுரம் , மணிமங்கலம் ,செம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நான்கு நாட்களாக பெய்த கனமழையால் ஏரிகள் ,குளங்கள், பொது கிணறுகள் போன்ற நீர்தேக்கங்கள் பெரும்பாலும் நிரம்பும் அளவை எட்டியுள்ளது. ஆனாலும் போதிய நீர்தேக்க வசதிகள் இல்லாததால் கால்வாய்கள் மற்றும் ஆறுகளின் வழியே தண்ணீர் வீணாக வழிந்து பொது இடங்களில் செல்கின்றது.
இதற்கிடையே வண்டலூர், ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கால்வாய்கள் மூலம் வெளியேறும் மழைநீரும் அதோடு சேர்ந்து மணிமங்கலம் ஏரியில் இருந்து, மதகுகள் வழியே வெளியேறும் பெருமளவு நீரும் அடையாறு ஆற்றில் கலப்பதால் அடையாறு ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் பெருமளவு தண்ணீர் வெளியாகி குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதால் வரதராஜபுரம், ராயப்பாநகர் ஆகிய பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகளிலும் வீடுகளிலும் அதிகப்படியான வெள்ளநீர் புகுந்ததாலும், பாம்பு, பூரான் போன்ற விஷப்பூச்சிகள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளது.
இதன் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கபட்டு பலர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேறி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினர் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படியுங்க: கனமழையால் பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!