சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கூட்டுறவு அங்காடிகள், சங்கங்கள் மற்றும் நுகர்பொருள் வழங்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேசுகையில், “கூட்டுறவு அங்காடிகள் உள்ளிட்டவற்றில் பொருள்களை வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதேபோல் ஊழியர்களும் முகக்கவசம், தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அனைத்து அங்காடிகளிலும் கிருமிநாசினிகள் வைத்திருக்க வேண்டும். 1500க்கும் மேற்பட்டவர்கள் பொருள்களை வாங்க வரும் கடைகளை விசாலமான இடங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டு அது தொடர்பான தகவல்களை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 19 பேருக்கு கரோனா!