ETV Bharat / city

பாலியப்பட்டு சிப்காட் பிரச்சனைக்கு விரைவில் விடிவு உண்டு: லெனின் பாரதி - பாலியப்பட்டு சிப்காட் பிரச்சனைக்கு விரைவில் விடிவு உண்டு

பாலியப்பட்டு சிப்காட் பிரச்சனைக்கு விரைவில் விடிவு உண்டு என லெனின் பாரதி தெரிவித்தார்.

லெனின் பாரதி
லெனின் பாரதி
author img

By

Published : Jul 22, 2022, 9:52 PM IST

சென்னை: திருவண்ணாமலை மாவட்டம், பாலியப்பட்டு ஊராட்சியில் விளைநிலங்களை ஆக்கிரமித்து அரசின் சிப்காட் அமைய இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 200 நாட்களுக்கும் மேல் அந்த ஊராட்சி மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை திரைப்பட இயக்குநரும் மற்றும் முற்போக்கு சிந்தனையாளருமான லெனின் பாரதி அதிக அளவில் ஆர்வம் காட்டி மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து லெனின் பாரதி ஈடிவி பாரத்துக்கு பிரத்யோக பேட்டி அளித்தார். அதில், பாலியப்பட்டு ஊராட்சியில் விளைநிலங்களை ஆக்கிரமித்து சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து மக்கள் போராடி வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் முதல் வருவாய் அலுலகம் வரை இதனை கண்டு கொள்ளவில்லை.

லெனின் பாரதி

ஒரு கிராம நிர்வாக அதிகாரி கூட மக்களை சந்திக்கவில்லை என தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக தொடக்கத்தில் அரசிடமிருந்து ஒரு வரைபடம் கிடைத்தது. அதில் எந்தெந்த இடங்களில் இந்த தொழிற்சாலைகள் அமையவுள்ளது என கூறப்பட்டிருந்தது. மேலும் பாலியப்பட்டு மலையை சுற்றியுள்ள மற்றும் நெருங்கியுள்ள பகுதிகளில் குறிப்பாக எங்கெல்லாம் கனிம வளங்கள் அதிகமாக இருந்ததோ அந்த இடங்களில் தொழிற்சாலைகள் அமையவுள்ளது என தெரிய வந்தது.

இதனால் தொடர்ச்சியாக போராட்டம் வெடித்தது. ஆனால் இதுவரை எந்த அரசியல்வாதிகளும் போராட்டக்காரர்களை சந்திக்கவில்லை. மக்கள் போராட்டத்தை மதிக்காததை கண்டிக்கிறோம் என்றார். சிப்காட் வேண்டாம் என மக்கள் கூறவில்லை. ஆனால் நிறைய இடங்கள் தரிசு நிலங்களாக உள்ளன. அந்த இடங்களில் தொழிற்சாலைகளை கொண்டு வாருங்கள் என கூறுகிறோம். ஆனால் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரக்கூடாது என்பதுதான் எங்களின் முக்கிய கோரிக்கை என குறிப்பிட்டார்.

மக்கள் போராட்டம் என்பது அதிகாரமான மற்றும் நியாயமான போராட்டம்தான். எனவே பாலியப்பட்டு போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்த அவர் சிப்காட்டுக்கான நிலம் கையயப்படுத்துதல் இன்னும் தொடங்கவில்லை. முதலில் அரசு கொடுத்த வரைபடத்தை வைத்து மக்கள் போராட்டத்தை தொடங்கியவுடன் அரசு இதற்கான அரசாணையை இன்னும் வெளியிடவில்லை என லெனின் பாரதி கூறினார்.

தற்போது தினந்தோறும் இந்த போராட்டம் நடக்கவில்லை. எனினும் விழிப்புடன் இருக்கிறோம். போராத்திற்கான குறிப்பிட்ட நேரம் மற்றும் நாட்களை மக்களுக்கு தெரியப்படுத்தி தொய்வில்லாமல் போராடி வருகிறோம் என முடித்தார்.

இதையும் படிங்க: மக்களுக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு ஏன் போராடவில்லை - செந்தில் பாலாஜி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.