ETV Bharat / city

'கிரிக்கெட் எதிர்பார்ப்பை பெட்ரோல் நீக்கியது' - ப. சிதம்பரம்

உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது என்று ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்
author img

By

Published : Jun 26, 2021, 2:11 PM IST

Updated : Jun 26, 2021, 2:50 PM IST

சென்னை: இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேவருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துவருகின்றன.

சதமடித்த பெட்ரோல் விலை

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து அண்மையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்றது. இருப்பினும் விலையில் இறங்குமுகம் இல்லை. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 99.19 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து 93.23 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ப சிதம்பரம் ட்வீட்
ப. சிதம்பரம் ட்வீட்

வரிக் கொள்கை அல்ல, வரிக் கொள்ளை!

பெட்ரோல் விலை ஏற்றத்தைக் கண்டித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். அதில், "உலக கிரிக்கெட் இறுதிப் போட்டியில் யாரும் சதம் அடிக்கவில்லை என்ற குறையைப் பெட்ரோல் விலை நீக்கிவிட்டது.

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ100 ஐத் தாண்டியது. கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு டாலர் 75 என்று இருக்கும்போது ஏன் இந்த நிலை?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலத்தில் கச்சா எண்ணெய் விலை 105 டாலரைத் தாண்டியது, ஆனாலும் பெட்ரோல் விலை ரூ.65 ஐத் தாண்டவில்லை! இன்றைய நிலைக்கு ஒரே காரணம் ஒன்றிய அரசின் வரிக் கொள்கை அல்ல; வரிக் கொள்ளை!

இந்த வரிக் கொள்ளையின் மூலமாக ஒன்றிய அரசு பல லட்சம் கோடி ரூபாய்களை நடுத்தர, ஏழை மக்களிடமிருந்து நாள்தோறும் உறிஞ்சுகிறது. மோடி அரசின் கொடூரத்தன்மையை மக்கள் நாள்தோறும் அனுபவிக்கிறார்கள்" என்று கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க; ஒலிம்பிக்: ரூ.3 கோடி பரிசுத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு

Last Updated : Jun 26, 2021, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.