ETV Bharat / city

மதுரையில் விஷவாயு தாக்கி 3 பேர் இறந்தது குறித்து விசாரிக்க ஆணை - அமைச்சர் கே.என் நேரு

விஷவாயு தாக்கி இறந்த மூன்று பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி வழங்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

அமைச்சர் கே.என் நேரு
அமைச்சர் கே.என் நேரு
author img

By

Published : Apr 22, 2022, 11:02 PM IST

சென்னை: மதுரையில் விஷவாயு தாக்கி இறந்தவர்கள் மூன்று பேர் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி வழங்கப்பட்டுள்ளதாக இன்று (ஏப்.22) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், இந்த இறப்பு குறித்த பதிலளிக்கையில், 'தனியார் நிறுவனத்தின் மூலம் தான் மதுரையில் கழிவுநீர் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இது குறித்து விசாரணைக்கு ஆணையிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையருக்கோ, பொறியாளருக்கோ தகவல் தெரிவிக்காமல் தனியார் நிறுவனம் இரவில் ஆட்களை வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. மாநகராட்சிக்கு தெரிந்து இருந்தால் இந்தத் தவறு நடந்து இருக்காது’ என்றும் கூறினார்.

இதையும் படிங்க: விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு - ரூ.10 லட்சம் நிதியுதவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.