ETV Bharat / city

ஈபிஎஸ் உடனான கூட்டத்தை புறக்கணித்து ஓபிஎஸ் திடீர் ஆலோசனை! - ஓபிஎஸ் திடீர் ஆலோசனை

சென்னை: அரசு நிகழ்ச்சியை புறக்கணித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இபிஎஸ்
இபிஎஸ்
author img

By

Published : Sep 29, 2020, 2:56 PM IST

Updated : Sep 29, 2020, 3:59 PM IST

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வரும் 7ஆம் தேதி வெளியாகும் என நேற்று நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்திற்குப்பின் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பசுமை வழிச்சாலையில் உள்ள, துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு, அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் ஆகியோர் இன்று காலை வந்தனர்.

தலைமைச் செயலகத்தில் கரோனா தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் பழனிசாமியின் ஆலோசனைக் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு செல்வதை தவிர்த்து, வீட்டிலேயே கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், "ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருக்கும் எனது ஆதரவு உண்டு. 2021இல் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் தொடர்பான குழப்பத்தால் ஆட்சி கலையாது. தனிப்பட்ட முறையில் துணை முதலமைச்சரை சந்திக்க வந்தேன்" என்றார்.

இபிஎஸ் உடனான கூட்டத்தை புறக்கணித்து ஓபிஎஸ் திடீர் ஆலோசனை!

தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்துடனான ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.முனுசாமி, ”நேற்றைய செயற்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட கட்சிப் பணிகள் குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளருடன் ஆலோசனை நடைபெற்றது. இது வழக்கமான கட்சிப் பணிதான்“ என்றார்.

இவர்களைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டனும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். இவர் அதிமுக அமைச்சரைவையிலிருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக காரசார விவாதம் நடந்த நிலையில், அரசு நிகழ்ச்சியை புறக்கணித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனிடையே, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது சொந்த மாவட்டமான தேனிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார்? - செயற்குழுவில் வெடித்த கருத்து மோதல்!

Last Updated : Sep 29, 2020, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.