சென்னை: தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதனைத்தொடர்ந்து, மின் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று (ஜூலை 19) அறிவித்தார். மின்சார வாரிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற துறை ரீதியான ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து, மின்கட்டணத்தை உயர்த்தும் தமிழ்நாடு அரசின் முடிவை கண்டித்து பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் மின்கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய விடியா அரசு, தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது" என பதிவிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய விடியா அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய விடியா அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 19, 2022தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி சுமை ஏற்றிய விடியா அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 19, 2022
முன்னதாக, மின்கட்டணம் உயர்வு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது, "கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால், கடன் எதுவும் வழங்கக்கூடாது என மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் ஏற்கெனவே கடும் கடன் சுமையில் உள்ள மின்சார வாரியம், மேலும் சிரமத்தை சந்திக்கும். எனவே, மின்சார கட்டணம் உயர்த்தப்படுகிறது" என்றார்.
மேலும், மின் கட்டண உயர்வு என்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராத வகையில் உயர்த்தவே உத்தேசிக்கப்பட்டுள்ளது எனவும், எனவே 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி