சென்னை: மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் மைக்கேல் என்பவருக்குச் சொந்தமான கனிஷ்மா என்ற தேனீர்க் கடை, கடந்த பத்து ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி, இரவுப் பணி முடிந்து கடையை மூடிவிட்டு கடையின் உரிமையாளர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் காலை கடைக்குச் சென்று பார்த்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 20 ஆயிரம் பணம், ஒரு லட்சம் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் திருடு போய் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் சிவப்பு நிற ஆடை அணிந்த நபர் ஒருவர் கடையின் ஷட்டரை உடைத்து, கடையின் உள்ளே நுழைந்து கோணிப்பை ஒன்றில் பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: Tamilnadu School Public Exams on May:மே மாதத்தில் பொதுத்தேர்வு- அமைச்சர் அன்பில் மகேஷ்