திமுக நாடாளுமன்ற உறுப்பினராக 35 ஆண்டிற்கும் மேலாக இருந்த முரசொலிமாறனின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை கோடம்பாக்கம் முரசொலி பத்திரிகை அலுவலத்தில் அவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எ.வ. வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு முழுவதும் முரசொலிமாறன் படத்திற்கு திமுகவினர் மலர் தூவி அஞ்சலி செய்தனர்.
மேலும் படிக்க: பஞ்சமி நில விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் தானாக மாட்டிக்கொண்டார்: அமைச்சர் கடம்பூர் ராஜூ