சென்னை: தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம் ராமகிருஷ்ணாபுரத்தில் ஏரியின் நீர்நிலை ஆக்கிரப்பு செய்யபட்டு 440 வீடுகள் கட்டபட்டு இருப்பதாக தனிநபர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்த்தார். அதன் அடிப்படையில் கடந்த மாதம் உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த மாதம் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுபணித்துறை மற்றும் வருவாய் துறையினர் நோட்டிஸ் வழங்குவதற்காக சென்றனர்.
அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவின் படி இன்று (ஜூலை 7) ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பொதுபணித் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் ஜேசிபி இயந்திரத்துடன் காவல் துறை உதவியுடன் சென்றனர்.
இதனையறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணை செயலாளர் வீரபாண்டி, மாவட்ட நிர்வாக குழு தலைவர் ஏழுமலை மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் அதிகாரிகளை மறித்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக தாங்கள் இந்த பகுதியில் வசித்து வருவதாகவும் தாங்கள் இங்கு இருந்து அகற்றப்பட்டல் எங்கள் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கபடும் எனவும் அதிகாரிகளிடம் வேதனை தெரிவித்தனர்.
தொடர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:‘சிதம்பரம் நடராஜர் கோயில் என்றாலே பிரச்சினைதான்’ - தமிழிசை சௌந்தரராஜன்