ETV Bharat / city

சட்டப்பேரவைத் தேர்தலில் டார்ச் லைட் சின்னம் இல்லை - பின்னடைவில் மக்கள் நீதி மய்யத்தினர்! - தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்

தமிழ்நாட்டில் வருகின்ற 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு, டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படாதது மக்கள் நீதி மய்யத்தினரிடம் பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் டார்ச் லைட் சின்னம் இல்லை

author img

By

Published : Dec 15, 2020, 8:52 PM IST

Updated : Dec 17, 2020, 3:36 PM IST

சென்னை: தமிழ்நாட்டில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கான தேர்தல் சின்னங்களை ஒதுக்கிய தேர்தல் ஆணையம் அதனை டிசம்பர் 14ல் வெளியிட்டது.

அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், 37 தொகுதிகளில், 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை. புதுச்சேரியில் மட்டும், மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 'எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி' என்னும் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், 37 தொகுதிகளில் போட்டியிட்டு, 3.78 விழுக்காடு வாக்குகள் பெற்ற கட்சிக்கு, வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 'டார்ச் லைட்' சின்னம் கிடைக்காதது மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018ஆம் ஆண்டு, 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியைத் தொடங்கினார். 2018 தொடங்கப்பட்ட கட்சி, அடுத்து வந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. இதனால் தலைவர் இல்லாமல், 37 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் களம் கண்டது. அத்தேர்தலில், மொத்தமாக 16,13,708 வாக்குகள் மக்கள் நீதி மய்யம் பெற்றது. இது 3.78 விழுக்காடு வாக்குகளாகும்.

கட்சி தொடங்கிய ஒரு வருடத்தில், பல ஆண்டுகளாக இருந்த கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பல இடங்களில் மக்கள் நீதி மய்யம் டெபாசிட் வாங்கியது அனைத்து கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்தது.

இந்த நிலையில். தமிழ்நாட்டில் வர இருக்கும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல வியூகங்கள் வகுத்து அக்கட்சி செயல்பட்டு வருகிறது. முதற்கட்ட நடவடிக்கையாக, "சீரமைப்போம் தமிழகத்தை" என்ற அறைக் கூவலுடன் பரப்புரைச் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார் கமல்ஹாசன். டிச., 13 முதல் 16ஆம் தேதி வரை நான்கு நாட்கள் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு பயணித்து வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து, தான் செல்லும் இடங்களில் எல்லாம், கமல்ஹாசன் 'டார்ச் லைட்' சின்னத்தை எடுத்து சென்று மக்களிடம் அதை பிரபலப்படுத்தி வந்தார். மக்கள் நீதி மய்யம் கூட்டம் தொடங்கி செய்தியார்கள் சந்திப்பு வரை எங்கும் 'டார்ச் லைட்' சின்னம் இடம்பெற்றிருக்கும். மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தல் பரப்புரை வாகனங்களில் கூட 'டார்ச் லைட் ' சின்னத்துடன் தோன்றி வந்தார் கமல்ஹாசன்.

இந்தநிலையில் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், 'டார்ச் லைட்' சின்னம் மக்கள் நீதி மய்யத்திற்கு கிடைக்காதது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் ஐ.ஏ.எஸ் அலுவலரான ரங்கராஜன், "கடந்த நவம்பர் 17ஆம் தேதி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக எங்களுக்கு 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தோம். 2015ஆம் ஆண்டு வரை அங்கீகரிக்கப்படாத கட்சிகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தில் ஒரு தேர்தலில் மட்டுமே போட்டியிட முடியும் என்று இருந்தது. அதன் பிறகு இரண்டு தேர்தலில் போட்டியிடலாம் என அந்த முடிவு மாற்றப்பட்டது.

அதனால் எங்களுக்கு நிச்சயம் டார்ச் லைட் சின்னம் கிடைக்கும் என்று நாங்கள் நினைத்தோம். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அவர்கள் முடிவு படி 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கவில்லை. இனி அடுத்தக்கட்ட நடவடிக்கையை கட்சித் தலைவர் கமல்ஹாசன் எடுப்பார். 'டார்ச் லைட்' சின்னம் இல்லை என்பதால், எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை. எங்களுக்கு 'டார்ச் லைட்' சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எந்தச் சின்னமாக இருந்தாலும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முகம், நேர்மை தான் எங்கள் சின்னம்" எனத் தெரிவித்தார்.

'டார்ச் லைட்' சின்னத்தைப் பார்த்து மக்கள் கமல்ஹாசக்கு வாக்களிக்கவில்லை. 'டார்ச் லைட்' சின்னம் இல்லை என்றாலும் கமல்ஹாசனுக்கு வருகின்ற வாக்குகள் வரத்தான் செய்யும் என்கிறார், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் நோக்கர் திருநாவுக்கரசு.

இது தொடர்பாக பேசிய அவர், "கமல்ஹாசன் கட்சி இன்னும் நான்கு ஐந்து தேர்தலில் கூட போட்டியிடவில்லை, தமிழ்நாட்டில், முக்கியமாக கிராமப்புறங்களில் ஒரு சின்னம் சென்று அடையவேண்டுமென்றால், கிட்டத்தட்ட ஐந்து தேர்தல்களைச் சந்திக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம், தற்போது தான் 2ஆவது தேர்தலைச் சந்திக்கிறது. மக்கள் கமல்ஹாசனுக்கு தான் வாக்கு அளிக்கிறார்கள் 'டார்ச் லைட்' சின்னத்துக்கு இல்லை. வருகின்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்குச் சின்னம் மாறினாலும், அவர்களுக்கு வாக்கு விழுக்காடு மாறாது. புதுச்சேரியில் டார்ச் லைட் சின்னம் வழங்கியதும், தமிழ்நாட்டுக்குத் தராததில் எந்த அரசியலும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் தொழில் நுட்ப தவறாக கூட இருக்கலாம். சின்னத்தால் கமல்ஹாசனுக்கு வாக்கு அதிகரிப்பதோ, குறைவதோ கிடையாது " எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியல் கட்சியினரின் சுயநல வேட்டைக்கு மக்கள் பலியாகிவிடக்கூடாது - கமல் ஹாசன்

Last Updated : Dec 17, 2020, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.