ETV Bharat / city

தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை இல்லை - கே.எஸ். அழகிரி - திமுக காங்கிரஸ் கூட்டம்

“தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ராகுல் காந்தி பரப்புரை செய்யும் இடங்களில், திமுக தலைவர்களும் பரப்புரை செய்ய தினேஷ் குண்டுராவ் அழைப்பு விடுத்தார். தொகுதி பங்கீடு குறித்து எந்த பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவில்லை” என்றார் கே. எஸ். அழகிரி.

No talks regarding constituency share
No talks regarding constituency share
author img

By

Published : Dec 2, 2020, 8:56 PM IST

சென்னை: திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் மற்றும் முக்கிய தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடுத் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவர் கே.ஆர். ராமசாமி ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, "2021ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் ராகுல் காந்தி பரப்புரை செய்யும் இடங்களில், திமுக தலைவர்களும் பரப்புரை செய்ய தினேஷ் குண்டுராவ் அழைப்பு விடுத்தார்.

அதற்காகவே இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. எந்தெந்த தொகுதியில் எப்போது பரப்புரை செய்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ராகுல் காந்தி தமிழ்நாடு வரும் தேதி குறித்து நாளை முடிவு செய்யப்படும்" என்று கூறினார்.

திமுக காங்கிரஸ் கூட்டம்

இந்த சந்திப்பின்போது திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.