வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்றுள்ளது. தற்போதைய நிலவர படி நாளை (நவ.25) மதியம் முதல் மாலை வரை காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே மணிக்கு 120 முதல் 130 கி.மீ., வேகத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலை தொடர்ந்து தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று(நவ.23) இரவு தொடங்கி தற்போது வரை சீரான இடைவெளியில் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், காலை 5 மணி நிலவரப்படி, நுங்கம்பாக்கம் பகுதியில் 46 மிமீ மழையும், அண்ணா பல்கலைக்கழக சுற்றுவட்டாரத்தில் 27 மிமீ மழையும், மாம்பலம் பகுதிகளில் 82 மிமீ மழையும், ஆலந்தூர் பகுதியில் 70 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், தொடர் கன மழையால் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதையும் படிங்க: மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் - விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்!