ETV Bharat / city

நீலகிரியில் அதி கனமழை; கோவை, தேனியில் மிக கனமழை எச்சரிக்கை! - கனமழை

சென்னை: நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

status
status
author img

By

Published : Aug 8, 2020, 3:19 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ” தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தின் சில இடங்களில் அதி கனமழையும், கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

மேலும், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்ட் 8 முதல் 12ஆம் தேதி வரை மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், மகாராஷ்டிரா, குஜராத் பகுதியை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வால்பாறையில் தொடர் மழை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.