ETV Bharat / city

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday

EtvBharatNewsToday
இன்றைய செய்திகள்
author img

By

Published : Jul 4, 2020, 7:48 AM IST

  • ஜூலை மாதத்திலும் விலையில்லா ரேஷன் பொருள்கள்

ஜூலை 31 வரையிலான ஊரடங்கு நீட்டிப்பை கருத்தில்கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வழங்கப்பட்டது போல் ஜூலையிலும் விலையில்லாமல் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் எனவும், வரும் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளுக்குச் சென்று இலவசப் பொருள்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News Today - July 04
ஜூலை மாதத்திலும் விலையில்லா ரேஷன் பொருள்கள்
  • ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் குறைகளை தீர்க்க ஏற்பாடு

பாஸ்போர்ட் தொடர்பான குறைகளை ஆன்லைன் மூலம் நிவர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. "ஸ்கைப்" செயலி மூலம் விண்ணப்பதாரர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 7-ம் தேதி ஸ்கைப் மூலம் முதல் தொடர்பு கொண்டு விண்ணப்பதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி குறைதீர் அலுவலரிடம் தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்து நிவர்த்திப் பெறலாம். அலுவலக வேலை நாள்களில் தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Today - July 04
ஆன்லைன் மூலம் பாஸ்போர்ட் குறைகளை தீர்க்க ஏற்பாடு
  • தர்ம சக்கர உபதேச தினம் - பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடல்

தர்மசக்கர உபதேச தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடுகிறார். அப்போது புத்தரின் நெறிகள், போதனைகள் பற்றி பேசவுள்ளார்.

News Today - July 04
தர்ம சக்கர தினம் - பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாடல்
  • லேசான மழைக்கு வாய்ப்பு

வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா கடல் பகுதியில் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

News Today - July 04
லேசான மழைக்கு வாய்ப்பு
  • பூரிஜெகந்நாத கோயில் ரதயாத்திரை இறுதிநாள் நிகழ்வு

பூரிஜெகந்நாத கோயில் ரதயாத்திரைின் இறுதிநாள் நிகழ்வான ரத்னா சிங்காசனம் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஜெகநாத சுவாமியின் ரதம் மீண்டும் கோயிலுக்கு அழைத்து செல்லப்படுகிறது.

News Today - July 04
பூரிஜெகந்நாத கோயில் ரதயாத்திரையில் இன்று இறுதிநாள் நிகழ்வு
  • செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி வழக்கு

தமிழகத்தில் அனைத்து பட்டப்படிப்பு இறுதி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது.

News Today - July 04
செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி வழக்கு
  • சிம்பு பாடலை வெளியிடும் ராகவா லாரன்ஸ்

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்துள்ள ஃபிரண்ட்ஷிப் படத்துக்காக நடிகர் சிம்பு பாடியிருக்கும் சூப்பர்ஸ்டார் ஆண்தம் என்ற பாடலை நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று வெளியிடுகிறார்.

News Today - July 04
சிம்பு பாடலை வெளியிடும் ராகவா லாரன்ஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.