முதலமைச்சர் பழனிசாமி பயணம்:
கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நாமக்கல், கரூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
![முதலமைச்சர் பழனிசாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8498903_cm.jpg)
கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா வழிபாடு:
கர்நாடகாவில் உள்ள கே.ஆர்.எஸ்., கபிணி அணைகள் நிரம்பியதைத் தொடர்ந்து வருணபகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, பாகினா பூஜை செய்து இன்று வழிபாடு நடத்த இருக்கிறார்.
![எடியூரப்பா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8498903_ediyurappa.jpg)
ஜம்மு-காஷ்மீரில் இன்று முதல் டாக்ஸி சேவை:
ஜம்மு-காஷ்மீரில் முதல்முறையாக ஜே.கே. கேப்ஸ் எனும் நிறுவனம் தனது டாக்ஸி சேவையை தலைநகர் ஸ்ரீநகரில் இன்று முதல் தொடங்கவுள்ளது.
![டாக்ஸி சேவை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8498903_taxi.jpg)
இங்கிலாந்து - பாகிஸ்தான் கடைசி டெஸ்ட்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சவுதம்டனில் இன்று (ஆகஸ்ட் 21) தொடங்குகிறது.
![இங்கிலாந்து - பாகிஸ்தான்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8498903_cricket.jpg)