ETV Bharat / city

திருப்புதல் தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் புதிய முறை! - திருப்புதல் தேர்வு விடைத்தாள்

திருப்புதல் தேர்வு எழுதும் 10,12ஆம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை அதேப்பள்ளியில் திருத்தக்கூடாது என அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Government Examination Department
திருப்புதல் தேர்வு விடைத்தாள்
author img

By

Published : Jan 8, 2022, 6:39 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் நடப்பு கல்வியாண்டில் படிக்கும் மாணவர்களுக்கான வகுப்புகள் நேரடியாக செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடங்கின.

இதனால் மாணவர்களுக்கான பொதுத் தேர்விற்கான பாடங்கள் குறைக்கப்பட்டன. மேலும் மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்வு எழுதாமல் இருந்ததால், அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதற்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுத்துறையும் வெளியிட்டது. கடந்தாண்டு டிசம்பர் 24ஆம் தேதி முதல் இந்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி வரையில் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

நேரடி வகுப்புகளுக்கு தடை

தற்போது ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

ஆனால் பொதுத் தேர்வு எழுதும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர்களுக்கு நடைபெறும் திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் செய்ய, தேர்வுத்துறை சில அறிவுரைகளை வழங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விடைத்தாள்களை அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக் கூடாது

அதில், “10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அதே பள்ளியில் மதிப்பீடு செய்யக் கூடாது. ஒரே பள்ளியில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல், வெவ்வேறு பள்ளிகளுக்கிடையே விடைத்தாள்களை பரிமாற்றம் செய்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு தேர்வும் முடிந்த உடன் விடைத்தாள்களை கட்டி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மையத்தில் அதை ஒப்படைக்க வேண்டும். மேலும் விடைத்தாள் திருத்தம் செய்யும் போது அதே பள்ளி மேலாண்மைக்கு ஒடுக்கீடு செய்யாமல், வேறு பள்ளி மேலாண்மைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். மதிப்பெண் பட்டியலை முதன்மைக்கல்வி அலுவலகத்தில் பள்ளிகள் ஒப்படைக்க வேண்டும்.

விடைத்தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்

பள்ளிகளில் விடைத்தாள்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் விடைத்தாள்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும் மதிப்பெண் பதிவேற்றம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர் கூறுகையில், “10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமின்றி, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று பரவல் நிலையை பொருத்து திருப்புதல் தேர்வு மதிப்பெண்களும் கணக்கிட வாய்ப்புள்ளது. எனவே மாணவர்கள் திருப்புதல் தேர்வினை நன்றாக படித்து எழுதுவது சிறந்ததாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஆதிபகவனும், ரிக் வேதத்தின் பரமாத்மாவும் ஒன்றே... ஆன்மிகத்தைப் பேசிய திருக்குறள்!'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.