சென்னை: கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் மே மாதம் 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.
இந்தக் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு செய்து, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு இன்று முதல் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டது. குறிப்பாக, திருமணம், இறப்பு, மருத்துவம் சார்ந்த அவசரப் பணிகளுக்கு இ-பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், கடந்த திங்கட்கிழமை (மே 17) திருமணத்திற்கான இ-பதிவு பிரிவு இணையத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது. இதையடுத்து புதிய நிபந்தனைகளுடன் திருமண நிகழ்ச்சிக்கான பிரிவு, இ-பதிவு இணையதளத்தில் இன்று (மே 19) மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிய நிபந்தனைகள்
- திருமண நிகழ்விற்கு வரும் அனைவருக்கும் சேர்த்து ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும்.
- ஒரு பதிவிலேயே அனைத்து வாகனங்களுக்கும் இ-பதிவு செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பிப்பவரின் பெயர் திருமண அழைப்பிதழில் இடம்பெற வேண்டும்.
- இ- பதிவின் போது திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: சத்தமில்லாமல் வந்திறங்கிய 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன்: சாதித்துக்காட்டியவர் இவரா?