ETV Bharat / city

மருத்துவ மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்துவதில் புதிய முறை - துணைவேந்தர் சுதா சேஷய்யன் பேட்டி

மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதில் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்தார். இது குறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்காக அவர் பிரத்யேக பேட்டியளித்தார்.

mgr_medical_university
mgr_medical_university
author img

By

Published : Dec 9, 2020, 11:07 PM IST

சென்னை: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் ஒரு லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கான பருவ தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது. மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவதிலும், அவற்றுக்கான முடிவுகளை வெளியிடுவதிலும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மேலும் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

தேர்வு முறையில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி அளித்தார்.

அவர் தெரிவித்ததாவது, "கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் காரணமாக மருத்துவக்கல்லூரி தேர்வுகளை நடத்துவது சில சிக்கல்கள் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டது. மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் இளநிலை, முதுநிலை படிப்புகள் போன்றவற்றிலும் தேர்வுகளை நடத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்வுகள் நடந்து முடிந்து விட்டன. மார்ச் மாதம் செய்முறை தேர்வுகள் நடந்து கொண்டிருக்கும் பொழுதும், விடைத்தாள்கள் முழுமையாக திருத்தும் பணிகள் முடியாத நிலையில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் வேறு எதுவும் செய்ய முடியாததால், சுமார் 40 ஆயிரம் விடைத்தாள்கள் திருத்தாமல் தேங்கி இருந்தன. பொது முடக்கத்தால் இந்த 40,000 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.

மருத்துவ படிப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்திற்கு கொண்டுவரப்பட்டு, அதனை ஸ்கேன் செய்து, கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் பார்த்து விடைத்தாளை ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்து தான் திருத்துவார்கள்.

பொது முடக்கம் மற்றும் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வரவழைத்து விடைத்தாள் திருத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

மருத்துவ மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்துவதில் புதிய முறை

அதே நேரம் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வழங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இந்தச் சூழ்நிலையில் சென்னை வர்த்தக சங்கத்தைச் சார்ந்தவர்கள் புதிய தொழில்நுட்ப வசதியினை தெரிவித்தனர்.

ஏற்கனவே கம்ப்யூட்டரில் ஸ்கேன் செய்து வைத்திருக்கும் மாணவர்களின் விடைத்தாள்களை, திருத்தும் ஆசிரியர்களுக்கு விர்ச்சுவல் டிஜிட்டல் முறையில் டெக்ஸ்டாப்பில் பார்க்கும் வகையில் மாற்றலாம் எனத் தெரிவித்தனர்.

இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியும் எங்களுக்கு அளித்தனர். ஒருவர் எங்கிருந்தாலும் பல்கலைக்கழகத்தின் மையத்திலுள்ள விடைத்தாளை அவரின் கம்ப்யூட்டர் டெஸ்ட் ஆப்-ல் பார்த்து திருத்த முடியும்.

அவர்கள் விடைத்தாளை திருத்தி மதிப்பெண்களை எங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். விடைத்தாள்கள் பாதுகாப்பாக திருத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

விடைத்தாள் திருத்தும் நபர், அதற்கு முன்பாக அவரது கம்ப்யூட்டரில் உள்ள வெப் கேமராவை ஆன் செய்ய வேண்டும். அவரின் செயல்பாடுகள் அனைத்தும் வெப் கேமரா மூலம் பல்கலைக்கழகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்படும்.

விடைத்தாள் திருத்தும் பொழுது அவருக்கு வேறு யாராவது உதவுகிறார்களா? என்பதும், புத்தகத்தைப் பார்த்து திருத்துகிறாரா? என்பது போன்ற செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிப்போம்.

இதனால் விடைத்தாள் திருத்தும் பணியில் எந்தவித தவறுகளும் நடைபெறாது. இது கரோனா காலத்தில் விடைத்தாள் திருத்தத்தில் கொண்டு வரப்பட்ட புதிய அணுகு முறையாகும். இதனை வருங்காலத்தில் மேலும் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

நூற்றுக்கணக்கான விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் எங்கிருந்தோ பல்கலைக்கழகத்திற்கு வந்து இங்கு தங்கி விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ளும் திட்டத்தை மாற்றலாம் எனப் பல்கலைக்கழகம் ஆலோசனை செய்கிறது.

வரும்காலத்தில் இந்தத் திட்டத்தில் சில மாற்றங்களை செய்து மேம்படுத்தி கொண்டு வருவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு எழுதுவதை பல்கலைக்கழகத்திலிருந்து கண்காணிப்பது போல் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி விடைத்தாள்கள் திருத்துவதில் மேம்படுத்தி செய்யலாம் என முடிவெடுத்துள்ளோம். விடைத்தாள்கள் திருத்தும் பொழுது திருத்துபவரின் செயல்பாடுகளில் எவற்றை அனுமதிக்கலாம் என்பது குறித்தும் ஆலோசித்து வரையறை செய்ய உள்ளோம். அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் அனைத்தும் விருச்சுவல் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டு முடிவுகள் வழங்கப்பட்டன.

மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான அனைத்து தேர்வுகளையும் ஆன்லைன் முறையில் கொண்டுவர முடியாது. மருத்துவ படிப்பில் கிளினிக்கல் தேர்வு, செய்முறை தேர்வு என 2 தேர்வுகள் உள்ளன.

இந்த முறைகளால் தேர்வு முழுவதும் ஆன்லைனில் நடத்த முடியாது. இந்தியாவில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் மட்டுமே விர்ச்சுவல் டிஜிட்டல் முறையில் விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து விடைத்தாள் திருத்தும் பணியில் பல்வேறு நவீன முறைகளை செயல்படுத்தி வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொறியியல் மாணவர்களின் முதல் பருவத் தேர்வை மார்ச் மாதம் நடத்த அரசு அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.