சென்னை உயர் நீதிமன்றத்தின் 75 அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் உள்ள நிலையில் தற்போது தலைமை நீதிபதியுடன் சேர்த்து 56 நீதிபதிகள் உள்ளனர். இவர்களில் மூத்த நீதிபதி சிவஞானம், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவர் பணிமாற்றலாகி செல்லும்பட்சத்தில் நீதிபதிகள் எண்ணிக்கை 55 ஆகக் குறையும்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நான்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.
புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள சுந்தரம் ஸ்ரீமதி, டி. பரத சக்ரவர்த்தி, ஆர். விஜயகுமார், முகமது ஷபிக் ஆகிய நான்கு பேரும் நாளை மாலை 4 மணிக்குப் பதவியேற்க உள்ளதாக, உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
அவர்களுக்குத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்துவைக்கவுள்ளார். புதிய நீதிபதிகளை, அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் வரவேற்றுப் பேசவுள்ளனர். பின், புதிய நீதிபதிகள் ஏற்புரை ஆற்றுவர்.
இதையும் படிங்க: ஐபிஎஸ் அலுவலர்கள் 5 பேர் டிஜிபி ஆக பதவி உயர்வு