சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 4 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 30 ஆயிரத்து 208 நபர்களுக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஏழு நபர்களுக்கும் என 30,215 நபர்களுக்கும் என கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 97 லட்சத்து 42 ஆயிரத்து 888 நபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் 31 லட்சத்து 64 ஆயிரத்து 205 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
இவர்களில் தற்போது மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 484 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் 26 ஆயிரத்து 639 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 20 ஆயிரத்து 457 என உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் 25 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 21 நோயாளிகளும் என 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் புதிதாக 6 ஆயிரத்து 296 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 3 ஆயிரத்து 786 நபர்களுக்கும்,
ஈரோட்டில் 1,199 நபர்களுக்கும் கன்னியாகுமரியில் 1,636 நபர்களுக்கும், சேலத்தில் 1,089 நபர்களுக்கும், தஞ்சாவூரில் 1,117 நபர்களுக்கும் திருப்பூரில் 1,504 நபர்களுக்கும் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் ஊழல்' - சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை