இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுதுறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் புதிதாக 85 ஆயிரத்து 494 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரத்து 282 நபர்களுக்கும், கத்தாரில் இருந்து தமிழகத்துக்கு வந்த ஒருவர், ஆந்திரா மாநிலத்திலிருந்து வந்த நான்கு நபர்கள், அஸ்ஸாம் ஜார்கண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர் என 3 ஆயிரத்து 290 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 94 லட்சத்து 42 ஆயிரத்து 502 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 8 லட்சத்து 92 ஆயிரத்து 780 நபர்கள் வைரஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் என 18 ஆயிரத்து 606 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் ஆயிரத்து 715 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 61 ஆயிரத்து 424 என உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி 8 நபர்கள் தனியார் மருத்துவமனையிலும், 4 நபர்கள் அரசு மருத்துவமனையிலும் என மொத்தம் 12 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 750 என உயர்ந்துள்ளது.
தலைநகர் சென்னையில் மார்ச் 17ஆம் தேதி 395 என்ற அளவில் குறைந்து வந்த கரோனா வைரஸ் தொற்று, ஏப்ரல் 2ஆம் தேதி ஆயிரத்தை கடந்து ஆயிரத்து 188 என உயர்ந்துள்ளது.
அதேபோல் செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், மதுரை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, ஆகிய மாவட்டங்களிலும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
இதுவரை மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு நிலவரம்
சென்னை - 2,51,141
கோயம்புத்தூர் - 59,529
செங்கல்பட்டு - 56,891
திருவள்ளூர் - 46,416
சேலம் - 33,590
காஞ்சிபுரம் - 30,818
கடலூர் - 25,805
மதுரை - 21,964
வேலூர் - 21,569
தஞ்சாவூர் - 19,976
திருவண்ணாமலை - 19,726
திருப்பூர் - 19,465
கன்னியாகுமரி - 17,609
தேனி - 17,322
விருதுநகர் - 16,897
தூத்துக்குடி - 16,592
ராணிப்பேட்டை - 16,517
திருநெல்வேலி - 16,236
திருச்சிராப்பள்ளி - 15,811
விழுப்புரம் - 15,561
ஈரோடு - 15,425
நாமக்கல் - 12,149
திருவாரூர் - 12,136
திண்டுக்கல் - 11,955
புதுக்கோட்டை - 11,910
கள்ளக்குறிச்சி - 10,973
நாகப்பட்டினம் - 9,271
தென்காசி - 8,749
நீலகிரி - 8,708
கிருஷ்ணகிரி - 8,546
திருப்பத்தூர் - 7,846
சிவகங்கை - 7,045
தருமபுரி - 6,789
ராமநாதபுரம் - 6,575
கரூர் - 5,670
அரியலூர் - 4,829
பெரம்பலூர் - 2,309
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 975
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1057
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ரூ.54 கோடிக்கு கொள்முதல்!