ETV Bharat / city

நீட் தேர்வு: தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்திலிருந்து 173 கேள்விகள்

நீட் தேர்வில் இந்த ஆண்டு கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 173 கேள்விகள் தமிழ்நாடு அரசின் 11,12ஆம் வகுப்பு பாடத்திட்டத்திலிருந்து இடம் பெற்றிருந்தன.

நீட் தேர்வு
நீட் தேர்வு
author img

By

Published : Sep 15, 2020, 6:33 AM IST

Updated : Sep 15, 2020, 2:25 PM IST

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் 1.15 லட்சம் மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியுள்ளனர்.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வில் கேள்விகள் கேட்கப்பட்டதால் அதனை எதிர்கொள்வது தமிழ்நாடு மாணவர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்தது. இதனால், மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பிற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

NEET exam questions details
நீட் தேர்வு கேள்விகள் விவரம்

இந்நிலையில் தமிழ்நாட்டில், 2018-19 கல்வியாண்டில் 11ஆம் வகுப்பிற்கும், 2019-20ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பிற்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

புதிய பாடத்திட்டமானது, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாடத்திட்டம் மற்றும் சர்வதேச அளவிலான பாடத்திட்டங்களையும் கருத்தில் கொண்டு வல்லுநர் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது.

NEET exam questions details
நீட் தேர்வு கேள்விகள் விவரம்

பள்ளிக் கல்வித் துறையின் புதிய பாட புத்தகங்களை படித்து முதல் முறையாக மாணவர்கள் நீட் தேர்வினை எழுதியுள்ளனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் இடம்பெற்றிருந்த 180 கேள்விகளில் 173 கேள்விகள் மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைந்திருந்ததாக தெரியவந்துள்ளது .

அந்த வகையில் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்ட அடிப்படையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் உயிர் அறிவியல் பகுதியில் மூன்று கேள்விகளும், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களிலிருந்து தலா இரண்டு கேள்விகளும் என மொத்தம் ஏழு கேள்விகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன.

NEET exam questions details
நீட் தேர்வு கேள்விகள் விவரம்

அதேசமயம், இயற்பியலில் 45 கேள்விகள், வேதியியலில் 45 கேள்விகள், உயிர் அறிவியலில் 90 கேள்விகள் என மொத்தம் 180 கேள்விகள் தமிழ்நாடு அரசு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பாடத்தினை படித்து தேர்வு எழுதிய மாணவர்கள் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Last Updated : Sep 15, 2020, 2:25 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.