ETV Bharat / city

"நீட் தேர்வு அரசின் முடிவல்ல; அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு" - மத்திய அமைச்சர்

நீட் தேர்வு அரசின் முடிவல்ல எனவும்; அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எனவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

"நீட் தேர்வு அரசின் முடிவல்ல; அது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு" - மத்திய அமைச்சர்

author img

By

Published : Sep 20, 2022, 7:18 PM IST

சென்னை: ஆளுநர் மாளிகையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தார். இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் கால்நடை, மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், "சண்டிகர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் அந்தரங்க வீடியோக்கள் கசிந்தது தொடர்பாக அம்மாநில அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு விரைவில் ஏற்றுக்கொள்ளும்.

தமிழ் ஒரு தேசிய மொழி. கல்வி என்பது தாய்மொழியில் இருக்க வேண்டும். அதன்படி, தேசிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழியும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்ப்பவர்கள் யாரிடமும் நியாயமான காரணங்கள் தெரியவில்லை. தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு விரைவில் ஏற்றுக்கொள்ளும். தேசிய கல்விக்கொள்கையில் தமிழ் மொழியும் இணைக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களையும் சமன்படுத்தவே நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மீண்டும் சென்னையில் உள்ள சாலையில் வைத்துச்சொல்கிறேன். நீட் தேர்வு அரசின் முடிவல்ல. அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. இதில் அரசு தலையிட முடியாது" என கூறினார்.

இதையும் படிங்க: 30 ஆண்டுகளுக்குப்பின் காஷ்மீரில் சினிமா தியேட்டர் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.