ETV Bharat / city

நீட் பயிற்சி மையம் வேண்டும்: மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல் - நீட் தேர்வு

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையத்தை தொடங்க வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ரவீந்திரன்
author img

By

Published : Apr 5, 2019, 2:00 PM IST

இது குறித்து மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைந்து 15 நாட்கள் முடிவடைந்துள்ளன. அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான நீட் பயிற்சி மையங்களை அரசு இன்னும் தொடங்கவில்லை. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 2018ஆம் ஆண்டு 1,300 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இருப்பினும் அவர்கள் அதிக மதிப்பெண்களை பெறவில்லை.

தனியார் பயிற்சி மையங்களை பெரும்பாலும் ஆங்கில வழியில்தான் வழங்குகின்றனர். தமிழ்நாடு அரசு தனியார் பயிற்சி மையத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி வழங்கிவருகிறது. ஆனால் அதற்கான நிதியை ஸ்பீடு நிறுவனத்திற்கு இன்னும் வழங்கவில்லை. சுமார் 15 லட்சம் வரை செலவு செய்துள்ள அந்த நிறுவனம் இந்த ஆண்டு பணம் அளித்தால் மட்டுமே பயிற்சி வழங்கப்படும் என கூறியுள்ளது.

மருத்துவர் ரவீந்திரநாத்

தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்தது. இந்தாண்டு அதுபோன்ற பயிற்சியை இன்னும் தொடங்கவில்லை. எனவே தமிழ்நாடு அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை உடனடியாக தொடங்கிட வேண்டும்” என்றார்.

Intro: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
நீட் பயிற்சி மையத்தை துவக்க வேண்டும்
மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்

Body:சென்னை,
அரசு பள்ளி மாணவர்கள் பலர் நீட் பயிற்சி வகுப்புகளை அரசு உடனடியாக போக வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் வலியுறுத்தினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவடைந்து 15 நாட்கள் முடிவடைந்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான நீட் பயிற்சி மையங்களை அரசு இன்னும் துவங்கவில்லை.
இது மிகப்பெரிய பாதிப்பை அரசு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்தும். சென்றாண்டு 1300 அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இருப்பினும் அவர்கள் அதிக மதிப்பெண்களை பெற வில்லை. அதனால் மூன்று மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு இன்னும் தமிழக அரசு நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்க அது அரசு பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை பாதிக்கும். அதிலும் குறிப்பாக தமிழ் வழியில் பயிலும் மாணவர்களை மிகவும் பாதிக்கும்.
அரசு பேச்சு மையங்களில் மட்டுமே தமிழ் வழியில் நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. தனியார் பயிற்சி மையங்களை பெரும்பாலும் ஆங்கில வழியில்தான் வழங்குகின்றனர்.
தமிழக அரசு தனியார் பயிற்சி மையத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி வழங்கி வருகிறது. ஆனால் அதற்கான நிதியை ஸ்பீடு நிறுவனத்திற்கு இன்னும் வழங்கவில்லை. சுமார் 15 லட்சம் வரை செலவு செய்துள்ள அந்த நிறுவனம் இந்த ஆண்டு பணம் அளித்தால் மட்டுமே பயிற்சி வழங்கும் என கூறியுள்ளது.
தமிழகத்தில் 412 பள்ளிகளில் நீட் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஸ்பீடு நிறுவனம் முதலில் 100 பள்ளிகளில் மட்டுமே பயிற்சி அளிப்பதற்கு ஒப்புக்கொண்டது. அரசு கூடுதலாக 312 மையங்களில் பயிற்சி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது. இதனால் 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் தமிழக அரசு கடந்த ஆண்டு சிறப்பு பயிற்சி மாணவர்களுக்கு அளித்தது. இந்தாண்டு அது போன்ற பயிற்சியை இன்னும் தொடங்கவில்லை. எனவே தமிழக அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்காமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை உடனடியாக தொடங்கிட வேண்டும். வருங்காலத்தில் அரசே நீட் பயிற்சியை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.