சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
ஜூலை 26ஆம் தேதி நடைபெறவிருந்த மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீட் தேர்வு எழுத உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இணைய வழி நீட் பயிற்சி வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
நீட் தேர்வு பயிற்சிக்கு கட்டணமில்லா இணையதள பயிற்சி: முதலமைச்சர் தொடங்கிவைப்பு
நீட் தேர்வினை எழுதும் மாணவர்களுக்கு இ-பாக்ஸ் (e-box) என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில், இணையம் வழி நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜூலை மாதம் இரண்டாவது வாரம் வரை நடைபெறவிருந்த பயிற்சி வகுப்புகள், ஆகஸ்ட் முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.