இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள 202 நகரங்களில் 3,682 தேர்வு மையங்களில் சுமார் 16 லட்சத்து 14 ஆயிரத்து 777 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
இதில், மகாராஷ்டிராவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் வைஷ்ணவி போபாலி, அபிஷேக் சிவாஜி ஆகிய இரு மாணவர்களின் வினாத்தாள்கள், ஓஎம்ஆர் தாள்கள் இரண்டும் மாறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற தடை உத்தரவால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகள் வெளியிட தடை நீங்கியுள்ளதாகவும், விரைவில் முடிவுகள் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. அனைத்து மாணவர்களின் மின்னஞ்சல்களுக்கு நீட் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நீட் தேர்வு முடிவுகளை வெளியிடலாம்; தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்