அக்டோபர் மூன்றாம் தேதி முதல் அக்டோபர் 13ஆம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. 2019ஆம் ஆண்டிற்கான இந்த அகில இந்திய நௌசைனிக் முகாமில், என்.சி.சி, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இயக்குநரகத்தைச் சேர்ந்த 36 தேசிய கேடட் கார்ப்ஸ் கடற்படை பிரிவு கேடட்கள் ஒட்டுமொத்த முதல் இடத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சாம்பியன்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.
இந்த அணி நாடு முழுவதும் உள்ள 17 இயக்குநரகங்களிலிருந்து 700 கேடட்களுக்கு எதிராகப் போட்டியிட்டது. ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநில இயக்குநரகத்தைச் சேர்ந்த கேடட்கள் இரண்டாம் இடத்தை கைப்பற்றினர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அகில இந்திய நௌசைனிக் முகாமில், என்.சி.சி. தமிழ்நாடு புதுச்சேரி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆகிய இயக்குநரகத்தைச் சேர்ந்த கேடட்கள் முதலிடத்தைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'முழுசா சந்திரமுகியா மாறுன பாட்டிய பார்...!' - வைரல் காணொலி