மத்திய அரசால் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு கல்விக் கொள்கை அனைத்து மாநில மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை பெறுவதற்காக வெளியிடப்பட்டது. இக்கல்விக் கொள்கை தொடர்பாக கல்வியாளர்கள், நடுநிலையாளர்கள், பிற துறையினர் என அனைவரும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள வரைவு கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாட்டில் உள்ள முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரிடம் கருத்துகளை பெற்று அனுப்புவதற்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது.
அதன், அடிப்படையில் தமிழ்நாடு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தலைவர் உஷாராணி தலைமையில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.