ETV Bharat / city

வன்னியர்கள் வாக்கு யாருக்கு? அதிமுகவின் தோல்வி- பா.ம.க.வின் வீழ்ச்சி!

தமிழ்நாட்டில் சாதிய அரசியல் மெல்ல மெல்ல தலைதூக்கும், இச்சமயத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடக்கிறது. அதே நேரத்தில் இத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தால், அது பாமகவின் வீழ்ச்சியாக பார்க்கப்படும் என்ற கருத்தும் மேலோங்குகிறது.

DMK VS PMK
author img

By

Published : Oct 20, 2019, 11:51 PM IST

தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளுக்கு இல்லாத ஒரு அரசியல் பாரம்பரியம் திமுக, அதிமுகவுக்கு உண்டு. இக்கட்சிகள் தொண்டு செய்த பழுத்த பழமான பெரியார் என்னும் விருட்சத்தின் விதைகள்.
தற்போது நமக்குள் ஒரு கேள்வி எழுலாம்.!

பெரியார்
யார் அந்த பெரியார்? அவர் விட்டு சென்ற பணிகள் என்ன?
சாதிய பெருமைகளே சரித்திரம் என்று நம்ப வைத்து நம்மை அடக்கி ஆண்ட கூட்டம் ஒரு பக்கம்.
அக்கூட்டத்தை பார்க்கவே துணிவில்லாமல், ஒடுங்கி, அடங்கி வாழ்ந்த கூட்டம் மறுபக்கம்.
அக்காலக் கட்டத்தில் தான் பெரியார் என்னும் ஆதவன் வெகுண்டெழுந்தார்.
அக்கூட்டத்தை அடக்கி ஆண்டார் பெரியார்.
அக்கூட்டத்தின் ஆட்டத்தை ஒடுக்கினார் பெரியார்.
அக்கூட்டத்தை சிதறுண்ட செய்தார் பெரியார்.
அக்கூட்டத்தை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தினார் பெரியார்.

தமிழகத்தின் அசைக்க முடியாத சக்தியாக வாழும், பெரியார் என்னும் ஆலமரத்தில் இருந்து பிரிந்த விழுந்த விதைகள் தான் திமுகவும், அதிமுகவும்.
பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என ஒன்றுப்பட்ட திமுக வெற்றிகளை குவித்து ஆட்சியை பிடித்த சமயம். இரண்டே ஆண்டில் பேரறிஞர் அண்ணா என்னும் ஆதவன் அஸ்தமனமானது.
மூன்றே ஆண்டுகளில் எம்ஜிஆர் என்னும் பேரோளி புதுக்கட்சியை தொடங்கியது. திமுகவை வலுவிழக்க தேசிய கட்சிகள் காத்திருந்த சமயம் அது. அப்போது தலைவரானவர் தான் கலைஞர் கருணாநிதி. கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. பெரியார் என்னும் ஆதவனின் பகுத்தறிவு கொள்கை சற்று தளர்த்தப்பட்டது அக்காலக்கட்டத்தில் தான்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற புதுக்கொள்கை புகுத்தப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியும் தோன்றியது. ”நாடு பாதி... சாதி., வன்னியர் ஓட்டு .. இல்லை” என்ற சாதிய கோஷம் முழங்கப்பட்டது. சாதிய இடஒதுக்கீடு போராட்டமும் ஆங்காங்கே வழக்கமாக நடக்கும் நிகழ்வானது. கல்வி, சமூக அந்தஸ்தில் பின்தங்கியிருந்த வன்னிய மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்தனர்.
எனினும் அவர்களால் அதற்கு பின்னால் இருந்த அரசியலை காண முடியவில்லை. இப்போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் தமிழ்நாட்டில் அறங்கேறிய அரசியல் சற்று வித்தியாசமானது. ஒவ்வொரு கட்சிகளும் ஒரு சாதியை கெட்டியாக பிடித்துக் கொண்டன.

திமுக வாக்குறுதி

ஒவ்வொரு ஊரிலும் பெரும்பான்மையாக வசிக்கும் சமூக மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்தனர். அறியா மக்கள் விட்டில் பூச்சியாய் விளக்கில் விழுந்து மாண்டு போகினர். இந்த அழிச்சாட்டியம் இன்றுவரை தொடர்கிறது. அவ்வாறான ஒரு சாதிய அரசியல்தான் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிரொலிக்கிறது.

இந்த தொகுதிகளில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவு வருகிறது. பல கட்டமாக போட்டி நடந்து வந்தாலும், குறிப்பாக வன்னியர்கள் வாக்கு யாருக்கு? என்ற போட்டி உருவாகியுள்ளது. இந்த உச்சக்கட்ட மோதலுக்கு காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் அக்டோபர் 7ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை. அதில் திமுக ஆட்சி அமைத்த உடன் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

வன்னியர் உள்இடஒதுக்கீடு

தேர்தலுக்கான ஏமாற்று வேலை என பாமக நிறுவனர் ராமதாஸ் உடனடியாக பதில் கொடுத்தார். அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் குறிப்பிட்ட வன்னியர்கள் வாக்குகளை திமுக பிரிக்க வேண்டும் என்று செயல்படுகிறது என்பதே ராமதாஸின் பதில் குற்றச்சாட்டு. இந்த விவகாரம் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இடையேயான மோதலை புதிய உச்சத்துக்கு எடுத்து சென்றுள்ளது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல், வன்னியர்கள் வாக்கு அரசியல் இன்று நேற்று தொடங்கியது அல்ல. 1987இல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ராமதாஸ் தலைமையில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பிறகு 1988இல் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடை வழங்கினார்.

வலுவிழக்கும் பாமக
தொடர்ந்து ராமதாஸ் அரசியல் கட்சி தொடங்கியதும் குறிப்பிட்ட வன்னியர்களின் வாக்குகள் அவர் வகிக்கும் கூட்டணிக்கு செல்ல தொடங்கியது. குறிப்பாக வடதமிழகத்தில் வன்னியர்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்தது. தற்போது அக்கட்சி கொஞ்சம், கொஞ்சமாக வலுவிழக்க தொடங்கியுள்ளது.

இதெற்கெல்லாம் காரணம், வன்னியர் சங்க தலைவர் மறைந்த காடுவெடி குருவின் குடும்பத்துடன் இணக்கமின்மை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனின் திமுக ஆதரவு, முத்தாய்ப்பாக இன்று ஒரு கூட்டணி, நாளை மற்றொரு கூட்டணி என தாவும் அரசியல் ஸ்திரமில்லாத முடிவுகள்..!

இடைத்தேர்தல்

இந்த நிலையில்தான், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் நடக்கிறது. நாங்குநேரி தொகுதியில் வன்னியர்கள் அதிகளவு இல்லை. மேலும் அந்த தொகுதி மக்களின் எண்ணோட்டங்களும் வேறு. ஆனால் விக்கிரவாண்டி தொகுதி அப்படியல்ல. அங்கு வன்னியர்கள் பெருமளவு இருக்கின்றனர். அவர்களே வெற்றியை தீர்மானிக்கும் கிங்மேக்கர்கள்.

ஆக, வன்னிய சமுதாய வாக்குகளை எந்த கட்சி அதிகம் பெரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விக்கிரவாண்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் (2016 ) திமுக 6,912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று இருந்தது. இருந்த போதிலும் தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இருப்பது திமுகவிற்கு கடும் சவாலாக உள்ளது.

யாருக்கு வெற்றி?

கடந்த சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக தனியாக 41,119 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்திருந்தது. ஆக, வன்னியர்கள் செல்வாக்கு எந்த கட்சிக்கு உள்ளது என்பது இந்த தேர்தல் வெற்றி மூலம் தெரியும், தெரியவரும் என்ற கருத்து எழுவதை தடுக்க முடியவில்லை. ஒருவேளை இந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தால், அது பாமகவிற்கும் நிச்சயம் பெரிய பின்னடைவாக பார்க்கப்படும்.

Intro:Body: வன்னியர்கள் வாக்கு யாருக்கு - விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன தான் சாதி ஒழிப்பு என்று பேசினாலும் இன்றும் அனைத்து அரசியில் கட்சிகளுகம் குறிப்பிட்ட சாதிய வாக்குகளை அடிப்படியாக கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது.

அது போல் தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்ட மன்ற இடைத்தேர்தல் நாளை நடக்க உள்ளநிலையில் அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவு வருகிறது. பல கட்டத்தில் போட்டி நடந்து வந்தாலும் குறிப்பாக வன்னியர்கள் வாக்கு அதிகப்படியாக எந்த கட்சி பெரும் என்ற உச்ச கட்ட மோதல் இரு காட்சிகள் இடையே நடந்து வருகிறது.

இந்த உச்ச கட்ட மோதலுக்கு காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை. அதில் திமுக ஆட்சி அமைத்த உடன் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். தேர்தலுக்கான ஏமாற்று வேலை என பாமக நிறுவனர் இராமதாஸ் பதிலுக்கு சாடினார். அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் குறிப்பிட்ட வன்னியர்கள் வாக்குகளை திமுக பிரிக்க வேண்டும் என்று வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என திமுக அறிவித்துள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்தது. அதேபோல் தற்போது இந்த விவகாரம் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே கடும் மோதலை உச்சத்திற்க்கு எடுத்து சென்றது.

வன்னியர்கள் வாக்கு அரசயில் இன்று நேற்று தொடங்கியது அல்ல 1987 இல் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ராமதாஸ் தலைமையில் நடந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் மூலம் தொடங்கியது. பிறகு 1988 இல் அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடை வழங்கினார். தொடர்ந்து ராமதாஸ் அரசியல் கட்சி தொடங்கியதும் குறிப்பிட்ட வன்னியர்களின் வாக்குகள் அவர் வகிக்கும் கூட்டணிக்கு செல்ல தொடங்கியது. குறிப்பாக வடதமிழகத்தில் வன்னியர்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அரசியல் சூழ்நிலையில் பாமக தன் செல்வாக்கை இழந்துவருவதாக அரசியல் நோக்கர்கள் கருத்துகின்றனர்.

இந்நிலையில் தற்போது விக்கிரவாண்டி,நாங்குநேரி இடைத்தேர்தலில் வன்னிய சமுதாய வாக்குகளை எந்த கட்சி அதிகம் பெரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக விக்கிரவாண்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் (2016 ) திமுக 6912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இருப்பது திமுகவிற்கு கடும் சவாலாக உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் பாமக தனியாக 41119 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பிடித்திருந்தது. இந்த சவாலை சமாளிக்கவே வன்னியர்களுக்கு திமுக ஆட்சி அமைத்த உடன் உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்ற கருத்தும் நிலவி வருகிறது. காடுவெட்டி குரு குடும்பத்துடன் ராமதாசுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை, திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் தமிழகவாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் போன்றவை திமுகவிற்கு பலம் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வன்னியர்கள் செல்வாக்கு எந்த கட்சிக்கு உள்ளது என்பது இந்த தேர்தல் வெற்றி மூலம் தெரியும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இதில் அதிமுக தோல்வி அடைந்தாள் பாமகவிற்கும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.