ETV Bharat / city

ஒரே சாதி, ஒரே சுடுகாடு என சொல்ல ஏன் அரசுக்கு தைரியம் வரவில்லை? - நல்லக்கண்ணு கேள்வி - nallakannu speeks about one nation one ration

சென்னை:சந்திரமண்டலத்தையே தொடுகின்ற அளவுக்கு வளர்ந்திருக்கின்ற அதே வேளையில் ஒரே சாதி, ஒரே சுடுகாடு என்ற நிலையை உருவாக்க மத்திய அரசுக்கு ஏன் தைரியம் வரவில்லை என நல்லக்கண்ணு கேள்வி எழுப்பியுள்ளார்.

nallakannu speeks about one nation one ration
author img

By

Published : Sep 8, 2019, 4:02 PM IST

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ’விழி’ எனும் வானொலி தொடக்க விழா சென்னை அசோக் நகரிலுள்ள அக்கட்சி அலுவலத்தில் தலைவர் திருமாவளன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ”விஞ்ஞானத்தில் சந்திரமண்டலத்தையே தொடுகின்ற அளவுக்கு நாடு வளர்ந்திருக்கின்றது. அதே வேளையில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேஷன் என்றெல்லாம் வரும்போது இந்திய நாட்டில் ஒரே சாதி என்றும் மாறவேண்டும். அதுமட்டுமல்லாது செத்தாலும் அடக்கம் செய்யும் இடம் ஒரே இடமாக இருக்க வேண்டும்.

ஒரே சாதி, ஒரே சுடுகாடு என்று சொல்ல ஏன் அரசுக்கு தைரியம் வரவில்லை?

130 கோடி பேர், 33 மாநிலங்கள், 27 மொழிகள் பேசுகின்ற மக்கள், வெவ்வேறு உணவு பழக்கம் கொண்டவர்கள் என பலதரப்பட்டவர்கள் வாழும் இடத்தில் ஒரே ரேஷன் என்று கூறுபவர்களுக்கு; ஒரே சாதி என்று கூற தைரியம் ஏன் இல்லை. அனைத்து மக்களுக்கும் ஒரே சுடுகாடு என்றும் ஏன் இதுவரை அவர்கள் கூறவில்லை.

130 கோடி மக்களை 130 பிரிவினராக வைத்துவிட்டு அனைவரும் ஒன்று எனச்சொல்லி ஏமாற்றுவதை முறியடிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. அதை திறமையாய் செய்து வரக்கூடியவர் தொல்.திருமாவளவன்” என்றார்.

Intro:Body:விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விழி என்கிற வானொலியின் தொடக்க விழா சென்னை அசோக் நகரிலுள்ள அக்கட்சி அலுவலத்தில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, நடிகர் அமீர், பத்திரிகையாளர் குணசேகரன், எவிடன்ஸ் கதிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

அப்போது பேசிய ஆர்.நல்லக்கண்ணு, "விண்வெளியில் சந்திரமண்டலத்தில் வெற்றியடைய வேண்டியது கொஞ்சம் தாமதமாகி இருக்கிறது. நிச்சயமாக வெற்றி அடைந்துவிடும். அப்படியிருக்கையில் சந்திர மண்டலத்துக்கு போகக்கூடிட்ய அளவுக்கு நம் விஞ்ஞானிகள் வளர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு பாராட்டுக்கள்.

விஞ்ஞானம் சந்திரமண்டலத்தையே தொடுகின்ற அளவுக்கு வளர்ந்திருக்கின்ற அதே வேளையில் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே ரேஷன் என்றெல்லாம் வரும்போது இந்திய நாட்டில் ஒரே சாதி என்று ஆக்க வேண்டும். அதுமட்டுமல்லாது செத்தாலும் அடக்கம் செய்யும் இடம் ஒரே இடமாக இருக்க வேண்டும்.

130 கோடி பேர் வாழும் நாட்டில், 27 மொழிகள் பேசுகின்ற நாட்டில், 33 மாநிலங்ள் இருக்கின்ற நாட்டில் வெவ்வேறு உணவு பழக்கம் இருக்கும் போது ஒரே ரேஷன் என்று சொல்லும் நீங்கள் ஏன் ஒரே சாதி என்று கூற தைரியம் இல்லை. ஒரே சுடுகாடு என்று ஏன் வரவில்லை.

130 கோடி மக்களை 130 பிராவினராக வைத்துவிட்டு எல்லாம் ஒன்று என்று சொல்லி ஏமாற்றுவதை முறியடிக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. அதை திறமையாய் செய்து வக்கூடியவர் தொல்.திருமாவளவன்" என்று தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.