சென்னை: நாடு முழுவதும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் மகாவீரர் நினைவு நாள் என்பதால், ஆட்டு இறைச்சிக் கடை மற்றும் மாமிச கடைகளைத் திறக்க மாநகராட்சி தடை விதித்துள்ளது.
தீபாவளி திருநாளில், பொதுமக்கள் 90% பேர் இறைச்சிகளை வாங்கி செல்வது வழக்கம். இதனால் அன்றைய தினம் இறைச்சி வியாபாரம் அதிக அளவில் நடைபெறும். இந்நிலையில் இறைச்சி கடைகளை திறக்க அனுமதி கோரி திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலரை சந்தித்து மனு அளிக்க வியாபாரிகள் சென்றனர்.
ஆனால் அலுவலர்கள் இல்லாததால் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற திருவொற்றியூர் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:அருப்புக்கோட்டை தடுப்பூசி முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு