ETV Bharat / city

தமிழ்நாட்டில் விதி மீறல் காரணமாக 607 சாயப்பட்டறை தொழிற்சாலைகள் மூடல்

author img

By

Published : Mar 15, 2022, 7:30 AM IST

தமிழ்நாட்டில் விதி மீறல் காரணமாக 607 சாயப்பட்டறை தொழிற்சாலைகள் மூடல் மூடப்பட்டுள்ளது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சாயப்பட்டறை
சாயப்பட்டறை

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஏழு ஆண்டுகளில் விதி மீறல்களின் காரணமாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு (DCC) 607 ஜவுளி, சாயமிடுதல் தொழிற்சாலைகளை அப்புறப்படுத்தியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காவேரி மற்றும் நொய்யல் ஆற்றில் சாயமிடுதல் தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றுவது தொடர்பாக 2021-2022 வரை நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து மத்திய அரசுக்கு ஏதேனும் புகார் அல்லது பிரதிநிதித்துவம் வந்துள்ளதா எனவும் சுற்றுச்சூழல் விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறியதற்காக ஜவுளி, சாயமிடுதல் தொழிற்சாலைகள் மீது எத்தனை கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் நாமக்கல் மக்களவை உறுப்பினர் எ.கே.பி சின்ராஜ் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் சார்பில் பதில் கூறும்போது, 2014 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சாயப்பட்டறைகளில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் ஜவுளி, சாயமிடுதல் தொழிற்சாலைகளுக்கு எதிராக தொழில் வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மத்திய அமைச்சகம் பெற்றுள்ளது.

இதில் விதிகளை மீறிய காரணத்தால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவால் 607 ஜவுளி, சாயமிடுதல் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, அவைகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் 202 தொழிற்சாலைகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி மூடப்பட்டுள்ளது. 602 தொழிற்சாலைகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு அவைகளை மூடுவதற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழிற்சாலைகளின் மீது எந்தவித குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) என்பது நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974, காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 மற்றும் விதிகளின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை - ரூ. 35 லட்சம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.