ETV Bharat / city

குடும்பத்தலைவிக்கு ரூ.1,000.. முக்கிய அறிவிப்பு... - பொங்கலில் பெண்களுக்கு மாதம் 1000

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்றத் திட்டத்தின் முக்கிய அறிவிப்பு பொங்கலில் வெளியாகும் என கூறப்படுகிறது.

குடும்பத்தலைவிக்கு 1000 ரூபாய், monthly rs 1000 for women
ரேஷன் அட்டைக்கு மாதம் 1000
author img

By

Published : Dec 4, 2021, 6:07 PM IST

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் இந்தத் திட்டத்துக்குத் தகுதி வாய்ந்த குடும்பங்களைக் கண்டறிய அளவுகோல் மற்றும் வழிமுறைகளை அரசு வகுத்துவருகிறது என்றும் தெரிவித்தார். ஆனால் ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இதுகுறித்த அறிவிப்பை அரசு வெளியிடவில்லை.

பொங்கலில் குடும்பத்தலைவிக்கு ரூ.1,000

இதனிடையே, 2022ஆம் ஆண்டு தைப் பொங்கலில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கப்படும் என்றத் திட்டத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகிவருகின்றன. அத்துடன் தற்போதுள்ள நிதி பற்றாக்குறையில், இந்தத் திட்டம் மூலம் 1000 ரூபாய்க்கு பதில் 500 ரூபாய் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தத் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலில், குடிசை வீடுகளில் வசிப்போர், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், 100 யூனிட்டுக்கு கீழ் மின்சாரம் பயன்படுத்துவோர் மட்டுமே இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தை 1 தமிழ்ப் புத்தாண்டு அறிவிப்பு வெளியாகுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.