சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலை மீனம்பாக்கம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சிட்லபாக்கம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இதையும் படிங்க :பார்த்திபன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பாலிவுட் சூப்பர்ஸ்டார்