கோயம்புத்தூர்: சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோயம்புத்தூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சமையல் எரிவாயு உயர்வைக் கண்டித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
உத்தர்ப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கண்டித்து பல்வேறு தரப்பினர், தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்ணீர் அஞ்சலி: இந்நிலையில் கோயம்புத்தூர் மாநகராட்சி 80 மற்றும் 81ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யத்தினர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சமையல் எரிவாயு விலை உயர்வைக் குறித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அதில் "எங்களை விட்டு வெகுதூரம் சென்ற உன்னை நினைத்து ஏங்குகிறோம்" தோற்றம் 2014ஆம் ஆண்டு ரூ.410 என்றும், ஏற்றம் 2022ஆம் ஆண்டு ரூ.980 என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: 'இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்'