உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (அக்.22) தனது 57ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு, நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள், பாஜகவினர் உள்ளிட்டோர் சமூக வலைதளங்கள் மூலம் அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
முதல் பதிவில் ராமி ரெட்டி!
இந்நிலையில் அமித்ஷாவின் பிறந்தநாளுக்கு, பிகாரின் ராஷ்ட்ரீய ஜனதா தள எம்எல்ஏ சுரேந்திர பிரசாத் யாதவ் இரு வேறு புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதனைக் கண்ட நெட்டிசன்கள் 'ரொம்ப நக்கல்யா உனக்கு' எனும் ரேஞ்சில் கமெண்டுகளை பதிவிட்டு வாழ்த்துப் பதிவுகளை வைரலாக்கினர்.
அவர் வெளியிட்ட முதல் பதிவில், அமித்ஷாவின் புகைப்படத்துக்கு பதிலாக தெலுங்கு திரைப்பட வில்லன் நடிகர் ராமி ரெட்டியின் புகைப்படத்தை இணைத்துள்ளார்.
-
Happy Birthday to our Home Minister @AmitShah Ji. 🙏🏻😌 pic.twitter.com/fPDoBo62x7
— Surendra Prasad Yadav (@iSurendraYadav) October 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy Birthday to our Home Minister @AmitShah Ji. 🙏🏻😌 pic.twitter.com/fPDoBo62x7
— Surendra Prasad Yadav (@iSurendraYadav) October 22, 2021Happy Birthday to our Home Minister @AmitShah Ji. 🙏🏻😌 pic.twitter.com/fPDoBo62x7
— Surendra Prasad Yadav (@iSurendraYadav) October 22, 2021
இரண்டாவது பதிவில் சந்தானபாரதி!
அதில், “நமது நாட்டின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” எனப் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் அமித்ஷாவையும், ராமி ரெட்டியையும் ஒப்பிட்டு கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டனர்.
இதற்கிடையே இரண்டாவதாக தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர் சந்தானபாரதியின் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்தார் எம்எல்ஏ.
அதில், “மன்னிக்க வேண்டும். இடைத் தேர்தலின் பரபரப்பான பரப்புரையின் மத்தியில் தவறு செய்துவிட்டேன். எங்களின் அற்புதமான மோட்டா பாய்க்கு(கொளுத்த தம்பி) பிறந்தநாள் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
I beg your pardon! Made a blunder in the midst of the hectic campaign of By-election.
— Surendra Prasad Yadav (@iSurendraYadav) October 22, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Happy Birthday to our amazing Mota Bhai! 🎂💐
:) https://t.co/dtevrJIqEL pic.twitter.com/wWz0WGmgPE
">I beg your pardon! Made a blunder in the midst of the hectic campaign of By-election.
— Surendra Prasad Yadav (@iSurendraYadav) October 22, 2021
Happy Birthday to our amazing Mota Bhai! 🎂💐
:) https://t.co/dtevrJIqEL pic.twitter.com/wWz0WGmgPEI beg your pardon! Made a blunder in the midst of the hectic campaign of By-election.
— Surendra Prasad Yadav (@iSurendraYadav) October 22, 2021
Happy Birthday to our amazing Mota Bhai! 🎂💐
:) https://t.co/dtevrJIqEL pic.twitter.com/wWz0WGmgPE
இடைத்தேர்தலுக்கிடையே கிண்டல்
ஏற்கனவே அமித்ஷாவை வறுத்தெடுத்துக் கொண்டிருந்த நெட்டிசன்களுக்கு எம்எல்ஏவின் இரண்டாவது பதிவு மேலும் நகைப்பை உண்டாக்கியது. வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி பிகாரின் தாராபூர், குஷேஷ்வர் அஸ்தான் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் பாஜகவினர், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையிலேயே ஆர்ஜேடி எம்எல்ஏ சுரேந்திர பிரசாத் யாதவ், பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவிட்டு அமித்ஷாவை கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிக்கிய இளங்கோவன்: 21 கிலோ தங்கம், 10 சொகுசு கார்கள் பறிமுதல் - அதிர்ந்துபோன அலுவலர்கள்!