ETV Bharat / city

கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் மம்தா பானர்ஜி..! - கருணாநிதி

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது சிலையை முரசொலி அலுவலகத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.

கருணாநிதியி
author img

By

Published : Aug 7, 2019, 5:30 PM IST

Updated : Aug 7, 2019, 8:54 PM IST

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதனையொட்டி கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி முரசொலி அலுவலகத்தில் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

கருணாநிதியின் சிலை
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை

முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியின் சிலையின் முக்கிய அம்சங்கள்

  • சிலையின் மேல்பகுதி தொடங்கி பீடம் வரை 30 டன் எடை கொண்டிருக்கிறது. அதில் 16 டன் எடையும் 6 அடி உயரமும் கொண்ட ஒரே கறுப்பு கிரானைட் கல்லால் முப்பரிமாண தோற்றத்தில் பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • ’’விஸ்கான் ஒயிட்’’ என்ற கிரானைட் கற்களை கொண்டு அலங்கார வடிவமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
  • நீளம் 10 அடி - அகலம் 10 அடி - உயரம் 9 அடி என்ற அளவில் பீடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கல் மைசூர் அருகேயுள்ள சாம்ராஜ் நகரில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது.
  • இந்த சிலை திருவண்ணாமலையில் உள்ள அருணை கிரானைட் கம்பெனி வடிவமைத்துள்ளது.
  • அமர்ந்த நிலையில் உள்ள கலைஞரின் சிலை, அகலம் 6.3 அடி - உயரம் 6.5 அடி என்கிற அளவில் வெண்கல சிலையாக செய்யப்பட்டுள்ளது.
    கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் மம்தா பானர்ஜி

இதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்ற மம்தா பானர்ஜி, ஸ்டாலின், நாராயணசாமி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கருணாநிதியின் சிலை
கருணாநிதியின் சிலை

இதன் பின்னர் ராயப்பேட்டையில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மம்தா பானர்ஜி உரை ஆற்ற இருக்கிறார்.

Intro:Body:Conclusion:
Last Updated : Aug 7, 2019, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.