சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மே 10) துப்பாக்கிச்சூடு மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் மாநிலத்தில் குறைந்துள்ளதாகவும் 2022-23ஆம் ஆண்டிற்கான காவல் துறை, தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் பணிகள் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அப்போது அவர், 'இது நம்ம போலீஸ் என்ற உணர்வு ஏற்படுள்ளது. குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை என அறிவித்து செயல்படுத்துகிறோம்' எனத் தெரிவித்த அவர் 'விசாரணைக்காக ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வரும்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் காவலர்கள் பின்பற்றவேண்டும்' என வலியுறுத்தினார்.
மேலும் எந்தச் சூழலிலும் போராட்டங்களில் துப்பாக்கிச்சூடு என்பது திமுக ஆட்சியில் ஏற்படவில்லை எனவும்; விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு எந்த ஆட்சியில் நடந்திருந்தாலும் அதை நியாயப்படுத்த முடியாது என்றும் குறிப்பிட்டார். தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை விசாரணையில் காட்டக்கூடாது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மாணவி சிந்து!