ETV Bharat / city

கர்ப்பிணிகளுக்கு ஆரம்பநிலை கருவளர்ச்சி குறைபாடுகளைக் கண்டறியும் சேவையை தொடங்கி வைத்த முதலமைச்சர் - கர்ப்பிணிகளுக்கு ஆரம்பநிலை கருவளர்ச்சி குறைபாடுகளை கண்டறியும் சேவை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சுகாதாரச் சீரமைப்புத் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையைத் தொடங்கி வைத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளைக் கண்டறியும் மருத்துவக் கருவிகளின் சேவையைத் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்
author img

By

Published : Mar 30, 2022, 3:59 PM IST

சென்னை: தமிழ்நாடு மக்களின் சுகாதார தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு, உலக வங்கியின் துணையுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஓர் அம்சமாக, சுகாதாரக்கொள்கை வகுப்பதில் குடிமக்களின் ஈடுபாட்டை மேலும் மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட மற்றும் மாநில அளவில் சுகாதாரப்பேரவை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இப்பேரவையில் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில், அம்மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய அரசு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், அரசு சாரா அமைப்புகள் (NGO), பொது சமூக அமைப்புகள், பொதுமக்கள், தனியார் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களின் ஆரோக்கிய வாழ்விற்கான தேவைகளை நேரடியாக மக்களிடமே கேட்டறிந்து, அக்கோரிக்கைகளுக்குத் தீர்வுகாணும் வகைகளில் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

சுகாதார மக்கள் சபையின் தீர்மானங்கள்: மேலும், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர், பெண்கள், இளைஞர்கள் போன்றோருடைய தனிப்பட்ட தேவைகள் முன்னிலைப்படுத்தித் தீர்வு காணப்படுகிறது.

இம்முன்னோடி திட்டத்தில் இதுநாள் வரை சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், தர்மபுரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தென்காசி, நீலகிரி, விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களில் நடைபெற்ற மாவட்ட சுகாதார மக்கள் சபையின் தீர்மானங்கள், மாநில சுகாதாரப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு, மருத்துவ கட்டமைப்பு வலுப்படுத்தத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்தகைய மக்கள் சபைக் கூட்டங்கள் மூலம், சுகாதார அமைப்பில் வெளிப்படைத் தன்மையும், பொறுப்புணர்வும் மேம்படும். சுகாதாரம் மற்றும் மருத்துவம் தொடர்பான கொள்கை முடிவு எடுப்பதில் சமுதாயத்தின் ஈடுபாடும் பங்கேற்பும் அதிகரிக்கும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் AutoDELFIA Maternal Analyzer என்ற மருத்துவக் கருவி பற்றி கேட்டறிந்தார்

ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளைக் கண்டறியும் திட்டம்: முதலமைச்சர், கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஆரம்ப நிலை கரு வளர்ச்சி குறைபாடுகளைக் கண்டறிந்திட ஒரு கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மருத்துவக் கருவிகளின் சேவையைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி உதவி, பேறுசார் மற்றும் குழந்தை நல ஒப்புயர்வு மையங்கள், சீமாங்க் மையங்கள் போன்ற பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில மருத்துவமனையில் அதாவது அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமாக AutoDELFIA Maternal Analyzer என்ற மருத்துவக் கருவி தருவிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

கரு மரபணு பிரச்னைகளைத் தவிர்க்கலாம்: இம்மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்டு வரும் அதிநவீன முழு உடற்பரிசோதனை மையத்தில், சிறப்பு தனித் தொகுப்பாக, ஆரம்ப நிலை கரு பரிசோதனைக்கு ரூ.1,000 தொகையும் இப்பரிசோதனையுடன் கர்ப்பிணித் தாய்க்குக் கூடுதலாகப் பரிசோதனைகள் மேற்கொள்ள ரூ.2,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கர்ப்ப காலத்தில் (11-14 வாரங்கள்) இந்தப் பரிசோதனை செய்வதன் மூலமாக கரு மரபணு சார்ந்த பல பிரச்னைகள் கண்டறியப்பட்டு, உடல் உறுப்பு ஊனத்துடன் குழந்தை வளர்வது தவிர்க்கப்படும்.

இதையும் படிங்க: தலைநகர் டெல்லியில் தலைநிமிரும் திராவிடக் கோட்டை.. அடுத்த பயணம் புதுடெல்லியை நோக்கி...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.